AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: 5 டி20 போட்டிகளில் மோதும் இந்தியா – இங்கிலாந்து.. எப்போது, எங்கு நடைபெறுகிறது?

IND vs ENG T20 Series: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் வருகின்ற 2026 ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது, மேலும் இரு அணிகளும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி 2026 ஜூலை 1ம் தேதி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டிலும், 2வது போட்டி 2026 ஜூலை 4ம் தேதி மான்செஸ்டரிலும் நடைபெற உள்ளது.

IND vs ENG: 5 டி20 போட்டிகளில் மோதும் இந்தியா – இங்கிலாந்து.. எப்போது, எங்கு நடைபெறுகிறது?
இந்தியா - இங்கிலாந்து
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Jun 2026 19:41 PM IST

இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 2026 ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய டி20 கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. கேப்டன் பதவியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டு, ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி முதல் முறையாக இந்திய அணியில் (Indian Cricket Team) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக இந்திய அணிக்குத் தலைமை தாங்குகிறார். திலக் வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது, இந்திய அணி நிர்வாகம் இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் நீண்டகாலத் திட்டங்களை வகுத்து வருவதையும் காட்டுகிறது. வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகத்தைக் காணவும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்தநிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் எத்தனை போட்டிகள் நடைபெறும் என்பதை தெரிந்துகொள்வோம்.

ALSO READ: 15 வயதில் டீம் இந்தியாவுக்கு தேர்வு.. சச்சினின் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி!

டி20 தொடரின் முழு அட்டவணை:


இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் வருகின்ற 2026 ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது, மேலும் இரு அணிகளும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி 2026 ஜூலை 1ம் தேதி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டிலும், 2வது போட்டி 2026 ஜூலை 4ம் தேதி மான்செஸ்டரிலும் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் 2026 ஜூலை 11 ஆம் தேதி வரை நடைபெறும்.

  • முதல் டி20 போட்டி – 2026 ஜூலை 1
  • 2வது டி20 போட்டி – 2026 ஜூலை 4
  • 3வது டி20 போட்டி – 2026 ஜூலை 7
  • 4வது டி20 போட்டி – 2026 ஜூலை 9
  • 5வது டி20 போட்டி – 2026 ஜூலை 11

டி20 தொடருக்குப் பிறகு, இந்தியாவும் இங்கிலாந்தும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜூலை 14 முதல் 2026 ஜூலை 19 வரை நடைபெறும். ஒருநாள் தொடருக்கான அணிகளை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.

ALSO READ: சூர்யவன்ஷிக்கு அழைப்பு.. அயர்லாந்து, இங்கிலாந்து, ஆசிய போட்டிக்கான இந்திய டி20 அணியின் விவரம்!

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி:

ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி.

Follow Us