AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஆதவ் அர்ஜுனா என்னிடம் சொன்னது இதுதான்!”.. மேடையில் உண்மையை உடைத்த பாடகர் அறிவு!

Singer Arivu NEET protest Secretariat arrest: நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவை எனத் தன்னிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாகத் தெரிவித்த பாடகர் அறிவு, முதலமைச்சரைச் சந்திப்பதால் மட்டுமே நீட் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது எனச் சென்னையில் பேசியுள்ளார்.

“ஆதவ் அர்ஜுனா என்னிடம் சொன்னது இதுதான்!”.. மேடையில் உண்மையை உடைத்த பாடகர் அறிவு!
பாடகர் அறிவு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Jul 2026 07:47 AM IST

சென்னை, ஜூலை 24: டெல்லியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் மாணவர்கள் அமைப்புகள் நடத்தி வரும் தீவிர நீட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாகச் சென்னையில் நடைபெற்ற கண்டனப் பேரணி-ஆர்ப்பாட்டத்தில் பிரபல சுயாதீனப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு பங்கேற்றார். அப்போது மேடையில் ஆவேசமாகப் பாடி தனது ஆதரவைத் தெரிவித்த அவர், ஜூலை 21 அன்று சென்னை தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தின் போது கைதானது மற்றும் அதன் பின் நடந்த பேச்சுவார்த்தை குறித்துப் பல அதிரடி உண்மைகளை உடைத்துள்ளார்.

மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!

தலைமைச் செயலக முற்றுகை:

கடந்த ஜூலை 21 செவ்வாய்க்கிழமை காலை, டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் பாடகர் அறிவு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயில் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு மண்டலமான தலைமைச் செயலகத்தில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி, காவல்துறையினர் பாடகர் அறிவைக் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இக்கைது நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

முதலமைச்சரைச் சந்திக்கவில்லை:

கைதுக்குப் பிறகு, பாடகர் அறிவு உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசியதாக இணையத்திலும் ஊடகங்களிலும் செய்திகள் பரவின. இதுகுறித்து போராட்ட மேடையில் தெளிவுபடுத்திய பாடகர் அறிவு, “நான் தலைமைச் செயலகத்தில் போராடியபோது என்னை உள்ளே அழைத்து அரசுத் தரப்பில் பேசினார்கள். ஆனால் ஊடகங்களில் பரவியது போல நான் முதலமைச்சரைச் சந்திக்கவில்லை. நான் சந்தித்தது விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத் தான்.”

“ஆதவ் அர்ஜுனா என்னிடம் சொன்னது என்ன?”

பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் கூறிய கருத்துகளை அம்பலப்படுத்திய அறிவு, “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்னிடம், ‘நீட் தேர்வை ரத்து செய்வது என்பது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே சாத்தியம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. எனவே நீங்கள் ஏன் இந்தத் தேவையில்லாத போராட்டத்தில் இறங்கினீர்கள்?’ என்று கூறி எனக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.”

நாடி நரம்பில் போராட்டம்:

அமைச்சரின் இந்த அறிவுரைக்கு மேடையில் பதிலடி கொடுத்துப் பேசிய அறிவு, “முதலமைச்சரை அல்லது அமைச்சர்களைச் சந்திப்பதனால் மட்டுமே இந்த நீட் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கையில் எடுத்து வீதியில் இறங்கிப் போராட வேண்டிய விவகாரம்; அதை மக்கள் தற்போது கையில் எடுத்துவிட்டார்கள்.

மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!

நாங்கள் பாபாசாகேப் அம்பேத்கரின் பேரப்பிள்ளைகள்! இனி நீட் பிரச்சினைக்காக மட்டுமல்ல, சாதிய ஏற்றத்தாழ்வு, மக்களின் அடிப்படை உரிமை என எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் வீதியில் இறங்கித் தொடர்ந்து குரல் கொடுப்போம். எனது குரல் மீண்டும் மீண்டும் மக்களுக்காக மட்டுமே ஒலிக்கும்!” எனக் கூறினார்.

Follow Us