AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அண்ணாமலையின் புதிய கட்சி.. ஆகஸ்ட்டில் பெயர், கொடி அறிமுகம் செய்ய திட்டம்!

இதற்கிடையே, புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், செப்டம்பர் 14ஆம் தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் புதிய கட்சி.. ஆகஸ்ட்டில் பெயர், கொடி அறிமுகம் செய்ய திட்டம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Jul 2026 07:41 AM IST

ஜூலை 24, 2026: வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, ஆகஸ்ட் மாதத்தில் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரில் வழங்கியிருந்தார்.

புதிய அரசியல் பாதையில் அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியில் நிலவி வந்த உட்கட்சி விவகாரங்கள், மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டது, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து பேசுபொருளாக மாறின.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாகவும், புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் அண்ணாமலை அறிவித்திருந்தார். பாஜகவில் இருந்து விலகிய பின்னர், ஏற்கனவே அவர் நடத்தி வந்த வி தி லீடர்ஸ் அமைப்பை அரசியல் அமைப்பாகப் பயன்படுத்தி வருகிறார். இந்த அமைப்பில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.

முதல் மாநில மாநாடு:

இதில் பல லட்சம் பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது அண்ணாமலைக்கு பெரும் ஆதரவாக அமைந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் தனது முதல் மாநாட்டை அண்ணாமலை நடத்தினார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அடுத்த மாத இறுதியில் கட்சியின் இரண்டாவது மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகம்:

இதற்கிடையே, புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், செப்டம்பர் 14ஆம் தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் அறிவிப்பு நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டங்கள் வரும் வாரங்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: முதல்வர் பார்க்கவில்லையா? இது மாற்றம்னு சொல்லாதீங்க – தவெக அரசு மீது பா.ரஞ்சித் கேள்வி

இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள வி தி லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us