AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் பார்க்கவில்லையா? இது மாற்றம்னு சொல்லாதீங்க – தவெக அரசு மீது பா.ரஞ்சித் கேள்வி

:நீட் தேர்வு முறைககேடுகளுக்கு எதிராக நீலம் அமைப்பு சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ர், நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிவாங்கும் வீடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா? என கேள்வி எழுப்பினார்.

முதல்வர் பார்க்கவில்லையா? இது மாற்றம்னு சொல்லாதீங்க – தவெக அரசு மீது பா.ரஞ்சித் கேள்வி
இயக்குநர் பா.ரஞ்சித் - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Jul 2026 22:05 PM IST

சென்னை, ஜூலை 22 : நீட் தேர்வு முறைககேடுகளுக்கு எதிராக நீலம் அமைப்பு சார்பில் சென்னை எழும்பூரில் ஜூலை 23, 2026 இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், பாடகர் அறிவு, நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தவெக அரசு மீது பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து பேசிய அவர், அம்பேத்கர் உங்கள் கொள்கை தலைவர் தானே, சேலம் மாவட்டத்தில் திறக்க முடியாத அம்பேத்கர் சிலையை நீங்கள் திறந்து வைக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.

தவெக அரசு மீது பா.ரஞ்சித் கேள்வி

மேலும் பேசிய அவர், நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிவாங்கும் வீடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா? நீங்க நீட் எதிர்பார்ப்பாளர் தானே, நீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை உடைய நீங்க போராடும் இளைஞர்களுக்கு ஒரு இடத்தை கொடுங்க. மாணவர்கள் அறவழியில் போராடட்டும் என்றார். எல்லோரும் ஜெய்பீம் என்ற அம்பேத்கர் முழக்த்தை ஏற்படுத்துகிறபொழுது எனக்கு இந்தியன் என்ற பெருமை கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் நிராகரிக்கப்பட்டிருக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் இன்னும் எத்தனை லாக்அப் மரணங்கள் நிகழும்.. முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

தொடர்ந்து பேசிய அவர், பாஜக பாசிச கட்சி. அதனால் அது போராட்டத்தை ஒடுக்கதான் செய்யும். ஆனால் தமிழக அரசு ஏன் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குகிறது. மாணவர்களை அடிப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? முதலில் தவெக அமைச்சரவையில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி அமைத்து 2 மாதங்கள் ஆகிவிட்டது இன்று வரை ஏன் எந்த தலித் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரா என்பதே சந்தேகமாக உள்ளது. அவர் எழும்பூரில் நின்றபோது தான் அது அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது. ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு கூட குரல் கொடுத்ததில்லை. இது மாற்றம் என்றெல்லாம் சொல்லாதீர்கள் என்று பேசினார்.

இதையும் படிக்க : ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துக்களையும் மதிக்க வேண்டும்.. – அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை

முன்னதாக பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,  நீட் என்பது நம்மிடமிருந்து மருத்துவ கல்வியை, மருத்துவ அறிவை நம்மிடம் இருந்து எடுப்பது தான் அவர்களுடைய செயல்பாடாக இருக்கிறது. நம்மை அவர்கள் முன் கைகட்டி நிற்க கூடிய இடத்துக்கு கொண்டும் செல்லும் முயற்சியாக தான் இந்த நீட் தேர்வு இருக்கிறது. நீட் தேர்வு தடைவிதிப்பதற்கு தொடர்ந்து போராட வேண்டும் என்று பேசினார்.

Follow Us