நீட் தேர்வினால் தனிப்பட்ட முறையில் பாதிப்பு… மருத்துவ கல்வியை பறிக்கும் முயற்சி – வெற்றிமாறன் கண்டனம்
சென்னை எழும்பூரில் நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் மாணவ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ஒரு நாட்டில் மாணவர்கள் போராட்டத்துக்கு வருகிறார்கள் என்றால் மற்ற அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என அர்த்தம் என்றார்.
சென்னை, ஜூலை 22 : சென்னை எழும்பூரில் நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் மாணவ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இயக்குநர் பா.ரஞ்சித், பாடகர் அறிவு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வெற்றிமாறன் கண்டனம்
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ஒரு நாட்டில் மாணவர்கள் போராட்டத்துக்கு வருகிறார்கள் என்றால் மற்ற அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என அர்த்தம். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். நீட் தேர்வின் அழுத்ததை என்னால் தனிப்பட்ட முறையில் உணர முடிகிறது. எனது நண்பர்களின் குழந்தைகள் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நண்பரின் மகன் 2வது முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அவரால் பணம் செலுத்தி படிக்க வைக்ககூடிய கல்லூரியில் இடம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
இதையும் படிக்க : தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!



நீட் என்பது நம்மிடமிருந்து மருத்துவ கல்வியை, மருத்துவ அறிவை நம்மிடம் இருந்து எடுப்பது தான் அவர்களுடைய செயல்பாடாக இருக்கிறது. நம்மை அவர்கள் முன் கைகட்டி நிற்க கூடிய இடத்துக்கு கொண்டும் செல்லும் முயற்சியாக தான் இந்த நீட் தேர்வு இருக்கிறது. நீட் தேர்வு தடைவிதிப்பதற்கு தொடர்ந்து போராட வேண்டும் என்று பேசினார்.
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு விவகாரம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரம் குறித்துக் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதையும் படிக்க : 1.75 டன் செம்மரக்கட்டை திருட்டு வழக்கு.. 5 வன ஊழியர்கள் சஸ்பெண்ட்.. திருப்பத்தூர் வன அலுவலர் அதிரடி!
இந்த விவகாரம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ அமைப்புகள் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்து சம்பவங்களும் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தான் நீலம் மாணவ அமைப்பு ஏற்படுத்திய போராட்டத்தில் திரையுலகினர் திரண்டு வந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.