AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC Test Rankings: டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த ரூட்.. கில் டாப் 10க்குள் முன்னேற்றம்!

ICC Test Batsman Rankings: லார்ட்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஜோ ரூட் சொதப்பினார். அதாவது, முதல் இன்னிங்ஸில் 1 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 8 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக, 851 ரேட்டிங்குடன், ரூட் முதல் இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ICC Test Rankings: டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த ரூட்.. கில் டாப் 10க்குள் முன்னேற்றம்!
ஜோ ரூட் - சுப்மன் கில்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 10 Jun 2026 16:56 PM IST

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் (ICC Test Ranking) தரவரிசையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது முதலிடத்தை இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு இங்கிலாந்து வீரரான ஹாரி ப்ரூக் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதே நேரத்தில், ரூட் மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்தது, தரவரிசையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு யஷஸ்வி ஜெய்ஸ்வால் வகித்து வந்த டெஸ்ட் பேட்டிங் தரவரிசையை, கில் தற்போது ஆக்கிரமித்துள்ளார்.

ALSO READ: சிறந்த பார்ம்.. கில் டி20 அணியில் இடம்பெறாதது ஏன்..? கிடைத்த சீக்ரெட் தகவல்!

நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக ஹாரி ப்ரூக்:


லார்ட்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஜோ ரூட் சொதப்பினார். அதாவது, முதல் இன்னிங்ஸில் 1 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 8 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக, 851 ரேட்டிங்குடன், ரூட் முதல் இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், 869 ரேட்டிங்குடன் 2ம் இடத்தில் இருந்த ஹாரி ப்ரூக்கை முந்தி, டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதே டெஸ்ட் போட்டியில், ப்ரூக் முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் எடுத்திருந்தார். அதேநேரத்தில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 3வது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சுப்மன் கில் எத்தனையாவது இடம்..?

முல்லன்பூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். இந்தப் போட்டியில் இந்தியா, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், சுப்மன் கில், 743 என்ற மதிப்பீட்டுடன் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி, தற்போது 8-வது இடத்தை எட்டியுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடத்திற்குச் சென்றுள்ளார்.

பும்ரா-ஜடேஜா எத்தனையாவது இடம்..?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவ்விரு வீரர்களும் விளையாடாதபோதிலும், ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையிலும், ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். அதேநேரத்தில், டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் ஜடேஜா 3 இடங்கள் சரிந்து 17-வது இடத்திற்கு வந்துள்ளார்.

ALSO READ: ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக யாருக்கு இடம்? போட்டியில் 2 அனுபவ ஆல்ரவுண்டர்கள்!

வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் 2 இடங்கள் முன்னேறி 244 என்ற மதிப்பீட்டுடன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரது வாழ்நாள் சிறந்த டெஸ்ட் ஆல்-ரவுண்டர் மதிப்பீடாகும்.

Follow Us