IND vs AFG: ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக யாருக்கு இடம்? போட்டியில் 2 அனுபவ ஆல்ரவுண்டர்கள்!
Hardik Pandya Injury: ஹர்திக் பாண்டியா தவிர, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷ் துபே என 3 ஆல்-ரவுண்டர்கள் இந்திய ஒருநாள் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்திய அணி மாற்று வீரர்கள் இல்லாமலேயே களமிறங்கக்கூடும்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் (IND vs AFG) இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு, வருகின்ற 2026 ஜூன் 13ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) தசைப்பிடிப்பு காரணமாக விலக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கான உடற்தகுதித் தேர்வில் ஹர்திக் தேர்ச்சி பெற்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது காலில் சுளுக்கு ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து விலகியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, ஹர்திக் பாண்ட்யா பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் 2 வாரங்கள் பயிற்சி பெற வேண்டியிருக்கலாம். எனவே, இந்திய அணியில் ஹர்திக்கிற்குப் பதிலாக எந்த ஆல்-ரவுண்டர் இடம்பெறக்கூடும் என்று பார்ப்போம். தற்போது, 2 வீரர்களிடையே கடுமையான போட்டி இருப்பதாகத் தெரிகிறது.
ALSO READ: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடர்.. எப்போது தொடங்குகிறது? முழு அட்டவணை இதோ!




சிவம் துபே:
ஹர்திக்கிற்குப் பதிலாக சிவம் துபேவே மிகவும் சரியான தேர்வாக உள்ளார். ஹர்திக்கைப் போலவே, துபேவும் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் இந்திய ஒருநாள் அணிக்கு பங்களிக்க முடியும். இருப்பினும், சிவம் துபே இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவம் துபே இதுவரை இந்தியாவுக்காக 4 ஒருநாள் போட்டிகளிலும் 64 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த 4 ஒருநாள் போட்டிகளில் 43 ரன்களுடன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். மேலும், டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்காக சிவம் துபே 991 ரன்கள் எடுத்து 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அக்சர் படேல்
ஒருநாள் தொடரில் ஹர்திக்கிற்கு மாற்றாக அக்சர் படேலின் பெயரும் பரிசீலிக்கப்படலாம். அக்சர் படேல் இந்தியாவுக்காக 3 வடிவங்களிலும் விளையாடும் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார். அக்சர் படேல் இதுவரை இந்திய அணிக்காக 15 டெஸ்ட், 71 ஒருநாள் மற்றும் 94 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது அனுபவம் அக்சரின் வாய்ப்புகளை அதிகரிக்கலாம். இதன் காரணமாக, அக்சர் படேலின் பெயர் முதன்மையாக இருக்கும்.
இந்திய அணியில் 3 ஆல்-ரவுண்டர்கள்:
ஹர்திக் பாண்டியா தவிர, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷ் துபே என 3 ஆல்-ரவுண்டர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அணி மாற்று வீரர்கள் இல்லாமலேயே களமிறங்கக்கூடும்.
ALSO READ: காலில் சுளுக்கு.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் ஹர்திக் பாண்டியா?!
இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி – 2026 ஜூன் 13, தர்மசாலா
- 2வது ஒருநாள் போட்டி – 2026 ஜூன் 17, லக்னோ
- 3வது ஒருநாள் போட்டி – 2026 ஜூன் 20, சென்னை