AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடர்.. எப்போது தொடங்குகிறது? முழு அட்டவணை இதோ!

India vs Afganistan ODI Schedule: இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் முதல் முறையாக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இந்தத் தொடர் வருகின்ற 2026 ஜூன் 13ம் தேதி தொடங்குகிறது. ஒரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி 2026 ஜூன் 17ம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 2026 ஜூன் 20ம் தேதியும் நடைபெறும்.

IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடர்.. எப்போது தொடங்குகிறது? முழு அட்டவணை இதோ!
இந்தியா - ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jun 2026 14:48 PM IST

கடந்த 2026 ஜூன் 8ம் தேதி நியூ சண்டிகரில் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான இந்தியா, இரண்டரை நாட்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team), ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். எனவே, ரசிகர்கள் இந்தத் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இந்தத் தொடரின் அட்டவணையைத் தெரிந்து கொள்வோம்.

ALSO READ: காலில் சுளுக்கு.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் ஹர்திக் பாண்டியா?!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில் இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். அதே சமயம், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார். தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதில், ரோஹித் சர்மா மட்டும் உடற்தகுதியை நிரூபித்த நிலையில், பிசிசிஐ விளையாட அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காலில் தசை பிடிப்பு காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலிக்கு காயம்:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, விராட் கோலி சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாடுவதை காண, ரசிகர்கள் இனி சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

ALSO READ: சிறந்த பார்ம்.. கில் டி20 அணியில் இடம்பெறாதது ஏன்..? கிடைத்த சீக்ரெட் தகவல்!

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடர் அட்டவணை

  1. இந்தியா – ஆப்கானிஸ்தான், முதல் போட்டி, 2026 ஜூன் 13, தர்மசாலா
  2. இந்தியா – ஆப்கானிஸ்தான், 2வது போட்டி, 2026 ஜூன் 17, லக்னோ
  3. இந்தியா – ஆப்கானிஸ்தான், 3வது போட்டி, 2026 ஜூன் 20, சென்னை

இதற்கிடையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் முதல் முறையாக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இந்தத் தொடர் வருகின்ற 2026 ஜூன் 13ம் தேதி தொடங்குகிறது. ஒரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி 2026 ஜூன் 17ம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 2026 ஜூன் 20ம் தேதியும் நடைபெறும்.

Follow Us