பயிற்சியாளராக எம்.எஸ்.தோனி தான் தேவை… காம்பீரை மறைமுகமாக விமர்சித்த முன்னாள் வீரர்
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல்பாடு குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வீரர்களை ஒரு சகோதரனைப் போல வழிநடத்தும் எம்.எஸ். தோனியைப் போன்ற ஒரு வழிகாட்டி' தான் இந்திய அணிக்குத் தேவை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல்பாடு குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கம்பீரின் கடுமையான அணுகுமுறையால் அணிக்கு பாதிப்பு என்று கூறிய அவர், வெறும் பயிற்சியாளராக இல்லாமல், வீரர்களை ஒரு சகோதரனைப் போல வழிநடத்தும் எம்.எஸ். தோனியைப் போன்ற ஒரு வழிகாட்டி’ தான் இந்திய அணிக்குத் தேவை என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கம்பீர் குறித்து ஸ்ரீசாந்த் கடும் விமர்சனம்
சமீபத்திய முக்கிய நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்ரீசாந்த், கம்பீரின் பயிற்சியளிக்கும் முறைகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை கம்பீர் கையாளும் விதம் சரியில்லை என்றார். கம்பீர் பொறுப்பேற்ற பிறகு ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் எதிர்பாராத விதமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், தற்போது அவர்களின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ஸ்ரீசாந்த் கவலை தெரிவித்தார். கேகேஆர் அணிக்கான வழிகாட்டியாக கம்பீர் வெற்றி பெற்றார் என்பதற்காக, அதே முறையை தேசிய அணியின் மீதும் திணிப்பது சரியல்ல என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க : முன் கூட்டியே தொடங்கும் ஐபிஎல் 2027 – போட்டிகள் அதிகரிக்கப்படுமா? பிசிசிஐ விளக்கம்




‘தோனியைப் போன்ற ஒரு வழிகாட்டிதான் தேவை’
இந்திய அணியின் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்டளைகளைப் பிறப்பிக்கும் பயிற்சியாளரை விட, வீரர்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் ஒரு வழிகாட்டிதான் நமக்குத் தேவை,” என்று ஸ்ரீசாந்த் தெளிவாகக் கூறினார். வெற்றி பெறும்போது மட்டும் சிரித்துவிட்டு, தோல்வியடையும்போது கோபப்படும் ஒருவர் பயிற்சியாளர் பதவிக்கு ஏற்றவர் அல்ல என்று கூறி அவர் மறைமுகமாக கம்பீரை விமர்சித்தார். அணியில் உள்ள ஒவ்வொரு வீரருடனும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ள மகேந்திர சிங் தோனியை, வீரர்களுக்கு சகோதரனாக இருந்து அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் ஒருவரை, வழிகாட்டியாக நியமிக்குமாறு அவர் பிசிசிஐயை வலியுறுத்தினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை வெற்றி குறித்துப் பேசிய ஸ்ரீசாந்த், அதற்கான முழுப் பெருமையையும் கம்பீருக்கு மட்டுமே அளிப்பதை எதிர்த்தார். களத்தில் சிறப்பான கேப்டன்சி திறனை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் மற்றும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘தொடர் நாயகன்’ விருதை வென்ற சஞ்சு சாம்சன் ஆகியோருக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்காதது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.
இதையும் படிக்க : வைபவ் சூர்யவன்ஷி மீது பாயும் நடவடிக்கை? பிசிசிஐ செயலாளர் விளக்கம்
ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப பந்துவீச்சில் சரியான மாற்றங்களைச் செய்து போட்டிகளை வென்றது களத்தில் இருந்த வீரர்களே தவிர, டிரஸ்ஸிங் அறையில் அமர்ந்திருந்த பயிற்சியாளர் அல்ல என்று சுட்டிக்காட்டி கம்பீரின் அணுகுமுறையை அவர் விமர்சித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவைப் போல, வீரர்களுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்ட ஒருவரே இந்திய அணிக்குத் தேவை என்றejd.
கம்பீரின் தலைமையின் கீழ் இந்திய அணி இரண்டு ஐசிசி தொடர்களை எளிதாக வென்றிருந்தாலும், இருதரப்புத் தொடர்களில் அணியின் செயல்பாடு கவலைக்குரியதாக அமைந்தது. குறிப்பாக, சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடர்களில் சந்தித்த தோல்விகள் (clean sweeps) ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தன. கம்பீர் மற்றும் ஷுப்மன் கில் கூட்டணியின் கீழ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என சமன் செய்ய முடிந்தாலும், அணியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்கள் மற்றும் மூத்த வீரர்களின் வெளியேற்றம் ஆகியவை ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.