AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைபவ் சூர்யவன்ஷி மீது பாயும் நடவடிக்கை? பிசிசிஐ செயலாளர் விளக்கம்

இலங்கை வீரர் விஷேன் ஹலம்பகேவுடன் வைபவர் சூர்யவன்ஷி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த தகவல்களை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா முற்றிலுமாக மறுத்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி மீது பாயும் நடவடிக்கை?  பிசிசிஐ செயலாளர் விளக்கம்
வைபவ் சூர்யவன்ஷி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Jun 2026 16:49 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை வீரர் விஷேன் ஹலம்பகேவுடன் வைபவர் சூர்யவன்ஷி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த தகவல்களை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா முற்றிலுமாக மறுத்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக நடவடிக்கை ?

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து விளக்கமளித்த தேவஜித் சைகியா, மைதானத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது போட்டி நடுவர்களின் பொறுப்பு. பிசிசிஐ அந்த விவகாரங்களில் தலையிடாது என்றார். மேலும் பேசிய அவர், பிசிசிஐ போட்டி நடுவரின் வேலையை செய்ய வேண்டுமா? மைதானத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் போட்டி நடுவருக்கு மட்டுமே உள்ளது. அதற்கான நடைமுறைகள் ஏற்கனவே முறையாக வகுக்கப்பட்டுள்ளன என்றார்.

இதையும் படிக்க : IND A vs AFG-A: முத்தரப்பு தொடர் பைனலில் இந்தியா ஏ.. வெளியேறியதா ஆப்கானிஸ்தான் ஏ?

என்ன நடந்தது?

இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியின் போது இலங்கை வீரர் விஷேன் ஹலம்பகே சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்க பதிலளிக்கும் விதமாக வைபவ் சூர்யவன்ஷி அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றில் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வைபவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இதற்கிடையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர்களில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இருநாடுகளுக்கும் செல்ல அவருடன் அவரது பெற்றோரும் பயணிக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு குறித்து பேசிய தேவஜித் சைகியா, 15 வயது சிறுவன் ஒருவரை நேரடியாக மூத்த வீரர்கள் நிறை தேசிய அணியில் இணைப்பது எளிதான காரியம் இல்லை. என்றார்.

இதையும் படிக்க : IND vs AFG: சேப்பாக்கத்தில் கடைசி ஒருநாள் போட்டி… ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா..?

சச்சினுக்கு பிறகு சூர்யவன்ஷி அரிய சாதனை

இதுகுறித்து மேலும் பேசிய அவர், பல ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது இளம் வயதில் இந்திய அணிக்காக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அணியில் உள்ள மற்ற வீரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் வயதில் மூத்தவர்கள். இப்படியான சூழலில் ஒரு 15 வயது சிறுவனுக்கு அவர்களது பெற்றோரின் துணை மிகவும் அவசியம். அடுத்த 20 முதல் 30 ஆண்டுகள் வரை இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கும் திறன் அவருக்கு இருக்கிறது என்றார்.

 

Follow Us