Womens T20 WC 2026: வெளியேறும் அபாயத்தில் இந்திய மகளிர் அணி.. அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?
Indian Women Cricket Team Semi Final Equation: வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளை இந்திய அணி அடுத்து எதிர்கொள்வதால், அதன் சிரமங்கள் அதிகரித்துள்ளன. ஐசிசி விதிகளின்படி, ஒவ்வொரு குழுவிலிருந்தும் 2 அணிகள் மட்டுமே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றால், அரையிறுதிக்குச் செல்லும் அவர்களின் பாதையைக் கடினமாக்கும்.
2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் (ICC Womens Cricket World Cup 2026) நேற்று அதாவது 2026 ஜூன் 21ம் தேதி நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்வியால் குரூப் 1 புள்ளி அட்டவணையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. இந்தத் தொடரின் அமைப்புப்படி, ஒரு தோல்வி கூட ஒரு அணியின் அரையிறுதி வாய்ப்புகளை கணிசமாகப் பாதிக்கும். தற்போது, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி (Indian Womens Cricket Team) இதுவே நிகழ்வதாகத் தெரிகிறது. 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் குரூப் 1-ல் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. தனது தொடக்க 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கிடையில், தனது 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.
ALSO READ: இனி இந்திய அணி எப்போது, யாரை எதிர்கொள்ளும்? ஜூன், ஜூலை மாதங்களுக்கான அட்டவணை!
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவும் வங்கதேசமும் சம எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், சிறந்த நிகர ரன் ரேட் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 3ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்தித்ததால், தொடரிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டன.




இந்திய அணி அரையிறுதிக்கு செல்லுமா..?
வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளை இந்திய அணி அடுத்து எதிர்கொள்வதால், அதன் சிரமங்கள் அதிகரித்துள்ளன. ஐசிசி விதிகளின்படி, ஒவ்வொரு குழுவிலிருந்தும் 2 அணிகள் மட்டுமே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றால், அரையிறுதிக்குச் செல்லும் அவர்களின் பாதையைக் கடினமாக்கும். மறுபுறம், தென்னாப்பிரிக்காவின் மீதமுள்ள போட்டிகள் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக உள்ளன. கணக்கீட்டின்படி, இந்த இரண்டு போட்டிகளும் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஒப்பீட்டளவில் எளிதானதாகக் கருதப்படுகின்றன. தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், 8 புள்ளிகளுடன் அரையிறுதியில் ஒரு இடத்தைப் பிடிப்பதற்கான வலுவான போட்டியாளராக மாறும். இருப்பினும், நிலைமை இன்னும் இந்தியாவிற்கு முற்றிலும் பாதகமாக இல்லை. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு எதிரான தனது அடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்றால், குழுவின் நிலவரம் மீண்டும் மாறும். மேலும் பல அணிகள் தகுதி பெறுவதற்கான போட்டியில் நுழையக்கூடும்.
ALSO READ: பயம் காட்டி கதையை முடித்த காப்.. தோல்வியை தொட்ட இந்திய அணி!
இந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டியில் என்ன நடந்தது?
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா, மரிசான் கேப்பின் அபாரமான 81 ரன்கள் இன்னிங்ஸின் உதவியால், வெறும் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராதா யாதவ் தவறவிட்ட 2 கேட்சுகளும் இந்தியாவிற்குப் பெரும் இழப்பாக அமைந்தன. ராதா யாதவ் 27 மற்றும் 66 ரன்களில் மரிசான் கேப்பிற்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். அதை கேப் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆட்டத்தை வெல்லும் இன்னிங்ஸை விளையாடினார்.