Team India: நிதிஷ் குமார் ரெட்டி விலகல்.. டி20 தொடருக்கு இளம் ஆல்ரவுண்டர் அழைப்பு!
Nitish Kumar Ruled Out of Team India: சூர்யான்ஷ் ஷெட்ஜ் சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடினார். அவர் ஐந்து போட்டிகளில் 147 ரன்கள் எடுத்தார். மேலும், இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக 72 ரன்கள் எடுத்தார். இதுவே அந்தத் தொடரில் அவரது ஒரே அரைசதமாகும். இந்த முத்தரப்புத் தொடரில் சூர்யான்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) மிக விரைவில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, காயம் காரணமாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இருந்து ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி விலக்கப்பட்டதால், இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் வீரர் சூர்யான்ஷ் ஷெட்ஜ் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடை முன்புறத் தசையில் காயம் ஏற்பட்டதாக பிசிசிஐ (BCCI) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவக் குழு நிதிஷ்குமார் ரெட்டிக்கு சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதன் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களைத் தவறவிட்டார்.
ALSO READ: வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கொடுங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை!




அறிமுக தொடரில் அறிமுகமாவாரா சூர்யான்ஷ் ஷெட்ஜ்..?
🚨 News 🚨
Suryansh Shedge replaces injured Nitish Kumar Reddy in #TeamIndia‘s squads for Ireland and England series.
More Details 🔽 | #IREvIND | #ENGvIND https://t.co/M92NI1TbE0
— BCCI (@BCCI) June 23, 2026
சூர்யான்ஷ் ஷெட்ஜ் சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடினார். அவர் ஐந்து போட்டிகளில் 147 ரன்கள் எடுத்தார். மேலும், இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக 72 ரன்கள் எடுத்தார். இதுவே அந்தத் தொடரில் அவரது ஒரே அரைசதமாகும். இந்த முத்தரப்புத் தொடரில் சூர்யான்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டர் மற்றும் வலது கை மீடியம்-பேஸ் பந்துவீச்சாளர் ஆவார்.
காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், நிதிஷ் தொடர்ந்து இந்திய ஆடும் லெவனில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். அவரது காயம் இந்திய அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆடுகளங்களில் சூர்யான்ஷ் எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பந்துவீச வேண்டியிருக்கும்.
ALSO READ: சிறப்பு வாய்ந்த நாளில் பத்ம ஸ்ரீ விருது.. குடியரசு தலைவர் கைகளால் வாங்கிய ரோஹித் சர்மா!
இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயண அட்டவணை
இந்திய அணி முதலில் அயர்லாந்துக்குச் செல்கிறது. அங்கு இந்திய அணி வருகின்ற 2026 ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரு அணிகளும் 2 டி20 போட்டிகளில் விளையாடும். அதைத் தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்துக்குப் புறப்படும். அங்கு இந்திய அணி 5 டி20 போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும். இந்த இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் தொடரானது வருகின்ற 2026 ஜூலை 1ம் தேதி தொடங்கி 2026 ஜூலை 19 ஆம் தேதி வரை தொடரும்.