Rohit Sharma: சிறப்பு வாய்ந்த நாளில் பத்ம ஸ்ரீ விருது.. குடியரசு தலைவர் கைகளால் வாங்கிய ரோஹித் சர்மா!
Rohit Sharma Padma Shri Award: ரோஹித் சர்மா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார். 19 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 510 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 3 வடிவங்களிலும் சேர்த்து 20,173 ரன்களையும் 50 சதங்களையும் அடித்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முன்னாள் இந்திய கிரிக்கெட் (Indian Cricket Team) கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தியாவின் 4வது உயரிய குடிமை விருதான பத்மஸ்ரீ விருதினை, புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று அதாவது 2026 ஜூன் 23ம் தேதி ரோஹித் சர்மா (Rohit Sharma) பெற்றார். முன்னதாக, கடந்த 2026ம் ஆண்டு மே மாதம் இவ்விருதைப் பெறவிருந்த ரோஹித் சர்மா, கிரிக்கெட் தொடர்பான காரணங்களால் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.
ALSO READ: உலகக் கோப்பையில் ரோஹித், கோலிக்கு வாய்ப்பு கிடைக்குமா? பிசிசிஐ செயலாளர் மழுப்பலான பதில்!




ரோஹித் சர்மாவுக்கு இந்த நாள் ஏன் சிறப்பு வாய்ந்தது..?
A highly prestigious honour for a great of the game 🙌
President of India, Smt Droupadi Murmuji @rashtrapatibhvn confers former #TeamIndia captain Rohit Sharma @ImRo45 with the Padma Shri award 👏
pic.twitter.com/6EyffHr1A4— BCCI (@BCCI) June 23, 2026
கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடியதால், இந்த நாள் ரோஹித் சர்மாவுக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும். சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர் . ரோஹித் சர்மா கருப்பு நிற சூட் அணிந்து வந்து, விருதைப் பெறுவதற்கு முன்பு குடியரசுத் தலைவருக்கு முன்பாகக் கைகூப்பி வணங்கினார். 2026-ல் பத்மஸ்ரீ விருது பெறும் ஒரே கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா மட்டும் அல்ல. முன்னதாக மே மாதம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத்தின் தலைமையின் கீழ், இந்திய மகளிர் அணி கடந்த 2025ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.
ALSO READ: வைபவ் சூர்யவன்ஷியின் கைக்கு வந்த பொக்கிஷம்.. ஹோட்டல் அறையில் என்ன நடந்தது?
50 சதங்கள், 20173 ரன்கள் மற்றும் 653 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார். 19 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 510 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 3 வடிவங்களிலும் சேர்த்து 20,173 ரன்களையும் 50 சதங்களையும் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் உலகிலேயே அதிகபட்சமாக 653 சிக்ஸர்களை ரோஹித் சர்மா அடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டைச் சதங்களை அடித்த உலகின் ஒரே கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆவார். தற்போது டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.