ENG vs NZ: புதிய வரலாறு படைப்பு! சொந்த மண்ணில் இங்கிலாந்தை ஓடவிட்ட நியூசிலாந்து!
ENG vs NZ Test Series: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் தோற்ற பிறகு, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்றது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டி நியூசிலாந்து அணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக அமைந்தது. நியூசிலாந்து அணிக்காக இன்னிங்ஸைத் தொடங்கிய டாம் லாதம் மற்றும் டெவன் கான்வே ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தனர்.
நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி (Newzealand) இங்கிலாந்தை (ENG vs NZ) 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி முதன்முறையாக ஒரு தொடரை தனித்துவமான முறையில் வென்று சாதனை படைத்தது. முதல் இன்னிங்ஸில் டெவன் கான்வே மற்றும் டாம் லாதம் சதம் அடித்தனர். 2வது இன்னிங்ஸில் டேரில் மிட்செல் சதம் அடித்தார். இந்த 3 சதங்களின் உதவியால், அணியால் ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்ய முடிந்தது. இது நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியது.
ALSO READ: அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட நியூசிலாந்து.. கண்ணீருடன் ஓய்வை அறிவித்த 3 வீராங்கனைகள்!




அசத்திய நியூசிலாந்து அணி:
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 438 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 354 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர், நியூசிலாந்து அணி தங்களது 2வது இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்து, இங்கிலாந்துக்கு 373 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. அந்த இலக்கைத் துரத்திய, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 212 ரன்களுக்குச் சுருண்டது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து ஒரு பெரிய சாதனையையும் படைத்தது.
நியூசிலாந்து படைத்த வரலாறு:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் தோற்ற பிறகு, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்றது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டி நியூசிலாந்து அணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக அமைந்தது. நியூசிலாந்து அணிக்காக இன்னிங்ஸைத் தொடங்கிய டாம் லாதம் மற்றும் டெவன் கான்வே ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தனர். கான்வே 22 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 157 ரன்கள் எடுத்தார். லாதம் 15 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில், டேரில் மிட்செல் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 100 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸுக்காக மிட்செலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ALSO READ: வைபவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை..? காரணத்தை சொன்ன இந்திய பயிற்சியாளர்!
2 முறையாக வெற்றி கண்ட நியூசிலாந்து:
History made. The first team to come from behind and win a three-Test series in England 🏆 pic.twitter.com/ZhLofmqrNL
— BLACKCAPS (@BLACKCAPS) June 29, 2026
2015 முதல், இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் 23 தொடர்களில் விளையாடி, 14 தொடர்களில் வெற்றியும், 7 தொடர்களில் சமனும், 2 தொடர்களில் தோல்வியும் கண்டுள்ளது. இந்த 2 முறையும், நியூசிலாந்து இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த 2026 தொடருக்கு முன்பு, 2021-ல் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் 1-0 என்ற கணக்கில் தோற்றது. எனவே, இந்த 2 தொடர்களிலும் நியூசிலாந்து அணி இங்கிலாந்து மண்ணில் ஆதிக்கம் செலுத்தியது.