AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Womens T20 World Cup 2026: அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட நியூசிலாந்து.. கண்ணீருடன் ஓய்வை அறிவித்த 3 வீராங்கனைகள்!

New zealand Womens Cricket Team: நியூசிலாந்து மகளிர் வீராங்கனைகளான சோஃபி டிவைன், சூசி பேட்ஸ் மற்றும் லியா தஹுஹு ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்த 3 ஜாம்பவான்களுக்கும் ஒரு வெற்றியுடன் பிரியாவிடை கொடுக்க நினைத்த நியூசிலாந்து அணி, அதற்குப் பதிலாக தோல்வியுடன் வழி அனுப்பி வைத்தனர்.

Womens T20 World Cup 2026: அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட நியூசிலாந்து.. கண்ணீருடன் ஓய்வை அறிவித்த 3 வீராங்கனைகள்!
நியூசிலாந்து ஜாம்பவான்கள் ஓய்வுImage Source: ICC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jun 2026 16:58 PM IST

10வது மகளிர் டி20 உலகக் கோப்பையின் (ICC Womens T20 World Cup 2026) ‘பி’ பிரிவிற்கான 2 அரையிறுதி அணிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நேற்று அதாவது 2026 ஜூன் 28ம் தேதி நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி தற்போது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், பி பிரிவில் இருந்து இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இங்கிலாந்திடம் அடைந்த இந்தத் தோல்வியின் மூலம், 3 நியூசிலாந்து வீராங்கனைகளின் (New zealand Womens Cricket Team) சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

ALSO READ: இன்னும் ஒரே ஒரு போட்டி.. இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு செல்லுமா? சமன்பாடு என்ன?

தோல்வியுடன் வெளியேறிய 3 ஜாம்பவான்கள்:


அதன்படி, நியூசிலாந்து மகளிர் வீராங்கனைகளான சோஃபி டிவைன், சூசி பேட்ஸ் மற்றும் லியா தஹுஹு ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்த 3 ஜாம்பவான்களுக்கும் ஒரு வெற்றியுடன் பிரியாவிடை கொடுக்க நினைத்த நியூசிலாந்து அணி, அதற்குப் பதிலாக தோல்வியுடன் வழி அனுப்பி வைத்தனர். இந்த போட்டிக்கு பிறகு, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஓய்வுபெற்ற 3 வீராங்கனைகளுக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கினர். அந்த நேரத்தில், சோஃபி டிவைன், சூசி பேட்ஸ் மற்றும் லியா தஹுஹு ஆகியோர் கண்ணீர் சிந்தி, உணர்ச்சிவசப்பட்டிருந்தனர்.

இந்தியாவுக்கு இன்று வாழ்வா சாவா போட்டி..?

‘பி’ பிரிவிலிருந்து இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன, ஆனால் ‘ஏ’ பிரிவின் தலைவிதி இன்று அதாவது 2026 ஜூன் 28ம் தேதி தீர்மானிக்கப்படும். இன்றைய போட்டிகள் தென்னாப்பிரிக்கா – வங்கதேசம், ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியா 8 புள்ளிகளையும், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தலா 6 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

ALSO READ: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து சம்பவம்.. ஸ்மிருதி மந்தனா ரன் வேட்டை தொடருமா?

ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் இந்திய அணி அரையிறுதியில் தனது இடத்தை உறுதி செய்யும். தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்தை வீழ்த்தி 8 புள்ளிகளை எட்டினாலும் கூட, இந்தியாவின் நிகர ரன் ரேட் (+2.268) சிறப்பாகவே இருக்கும். இருப்பினும், ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றால், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணியின் பயணம் முடிவுக்கு வரும்.

Follow Us