AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Indian Womens Team: இன்னும் ஒரே ஒரு போட்டி.. இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு செல்லுமா? சமன்பாடு என்ன?

Team India Womens Semi Final Scenario: 'ஏ' பிரிவின் 2 போட்டிகளும் 2026 ஜூன் 28ம் தேதியான நாளை நடைபெறும். வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், 8 புள்ளிகள் கிடைக்கும். இந்த நிலையில், அரையிறுதிக்குச் செல்ல இந்திய அணிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதன்படி, எப்படியாவது ஆஸ்திரேலியாவைத் தோற்கடிப்பதுதான்.

Indian Womens Team: இன்னும் ஒரே ஒரு போட்டி.. இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு செல்லுமா? சமன்பாடு என்ன?
இந்திய மகளிர் அணிImage Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Jun 2026 16:06 PM IST

2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் (2026 Womens T20 World Cup) அரையிறுதிப் போட்டிக்கு இதுவரை இங்கிலாந்து அணி மட்டுமே தகுதி பெற்றுள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் மகளிர் அணி உட்பட 4 அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், ‘ஏ’ பிரிவில் இந்திய அணி (Indian Womens Cricket Team) அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 2ம் இடத்தில் இருந்தாலும், அதன் அரையிறுதித் தகுதி மற்ற அணிகளைப் பொறுத்தே உள்ளது. இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருந்த போதிலும், இந்திய அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளது.

ALSO READ: பேட்டில் பட்டதா..? விக்கெட் விழுந்ததா..? சர்ச்சையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விக்கெட்.. வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலிய அணி முதலிடம்:

ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவு புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ளன, ஆனால் நிகர ரன் ரேட் அடிப்படையில் இந்திய மகளிர் அணி முன்னிலை வகிக்கிறது. லீக் சுற்றில் 3 அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மீதமுள்ளது. இதன் காரணமாக, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நிகர ரன் ரேட் அடிப்படையில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பது தெரியவரும்.

இந்தியா ஒரே ஒரு போட்டியில் தோற்றாலும் என்ன ஆகும்..?

இந்திய மகளிர் அணியின் கடைசி லீக் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை அதாவது 2026 ஜூன் 28ம் தேதி நடைபெற உள்ளது. 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் களத்தில் இருப்பதால், இந்திய அணிக்கு ஏற்கனவே தலைவலி அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவின் கடைசி போட்டி வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறுவது, இந்திய அணியின் தலைவலியை மேலும் இரட்டிப்பாக்கும்.

‘ஏ’ பிரிவின் இரண்டு போட்டிகளும் 2026 ஜூன் 28ம் தேதியான நாளை நடைபெறும். வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், 8 புள்ளிகள் கிடைக்கும். இந்த நிலையில், அரையிறுதிக்குச் செல்ல இந்திய அணிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதன்படி, எப்படியாவது ஆஸ்திரேலியாவைத் தோற்கடிப்பதுதான். தென்னாப்பிரிக்கா 8 புள்ளிகளை எட்டினால், ஆஸ்திரேலியாவிடம் தோற்பது இந்திய அணியை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றிவிடும்.

ALSO READ: வங்கதேசத்திற்கு எதிராக வெற்றியை தொட்ட இந்திய அணி.. அரையிறுதிக்குள் நுழைந்ததா?

ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்காமலேயே இந்தியா அரையிறுதிக்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், அவ்வாறு செய்ய வேண்டுமானால், தென்னாப்பிரிக்கா வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோற்க வேண்டும் என இந்திய அணி நம்ப வேண்டியிருக்கும்.

Follow Us