ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்.. தங்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா..
இந்திய மகளிர் அணியின் வெற்றியை தொடர்ந்து, தொழிலதிபரும் மகிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் இந்திய வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்து உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டார். மேலும், கலப்பு 4x400 மீட்டர் ரிலே போட்டியில் தீர்தேஷ் ஷெட்டி, பூவம்மா எம்.ஆர்., பரத் ஸ்ரீதர் மற்றும் நீரு பதக் ஆகியோர் 3 நிமிடம் 17.06 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
ஜூன் 25, 2026: ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது தொடரின் இறுதி நாளில் இந்திய தடகள அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. மகளிர் 4×100 மீட்டர் ரிலே போட்டியில் ஸ்ரபானி நந்தா, எஸ்.எஸ். ஸ்நேஹா, சுதேஷ்னா சிவங்கர் மற்றும் தமன்னா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 43.85 விநாடிகளில் இலக்கை எட்டியது. இது இந்த சீசனில் அந்த அணியின் சிறந்த நேரமாகவும் பதிவாகியுள்ளது. இதன்மூலம் இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்தது.
ஆனந்த் மஹிந்திரா பாராட்டு:
Winning against the Chinese. In China.
At the Asian Relay Championships.
Srabani, Sudeshna, Sneha & Tamanna in the 4×100 relay.
Power. Speed. Grace. Commitment.
But above all, teamwork.
This clip has it all.
I’m watching it on loop.
More of this please. 🇮🇳 pic.twitter.com/E00i0muduc
— anand mahindra (@anandmahindra) June 24, 2026
இந்த வெற்றியைத் தொடர்ந்து, தொழிலதிபரும் மகிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் இந்திய வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்து உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டார். மேலும், கலப்பு 4×400 மீட்டர் ரிலே போட்டியில் தீர்தேஷ் ஷெட்டி, பூவம்மா எம்.ஆர்., பரத் ஸ்ரீதர் மற்றும் நீரு பதக் ஆகியோர் 3 நிமிடம் 17.06 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்:
அதேபோல், கலப்பு 4×100 மீட்டர் ரிலே போட்டியில் பிரணவ் கவுரவ், தமன்னா, அனிமேஷ் குஜூர் மற்றும் எஸ்.எஸ். ஸ்நேஹா ஆகியோர் 41.27 விநாடிகளில் பந்தயத்தை முடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தாய்லாந்து தங்கமும், சீனா வெள்ளியும் வென்றன.
மேலும் படிக்க: வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்திய மகளிர்.. மழையால் போட்டிக்கு தடையா?
ஆண்கள் 4×400 மீட்டர் ரிலே போட்டியில் இந்திய அணி 3:05.33 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. பெண்கள் 4×400 மீட்டர் ரிலே அணியும் 3:34.88 விநாடிகளில் இலக்கை எட்டி நான்காவது இடத்தில் நிறைவடைந்தது.
மொத்தத்தில், ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்திய அணி ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்பில் சிறப்பான தடம் பதித்துள்ளது. இந்த வெற்றி, வரவிருக்கும் சர்வதேச தடகள போட்டிகளுக்கான இந்திய வீரர், வீராங்கனைகளின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.