AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சொதப்பிய பேட்ஸ்மேன்கள் – அயர்லாந்துக்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வி

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்ப 18.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து  இந்திய அணி  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 

சொதப்பிய பேட்ஸ்மேன்கள் – அயர்லாந்துக்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வி
இந்திய அணி அதிர்ச்சி தோல்வி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Jun 2026 21:54 PM IST

அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. முதல் போட்டி ஜூன் 26, 2026 இன்று  பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அயர்லாந்துக்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வி

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்ப 18.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து  இந்திய அணி 34  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதையும் படிக்க : Ind vs Ire – களமிறங்கும் முன்பே சம்பவம் செய்த வைபவ் – அயர்லாந்து அணி அதிர்ச்சி

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்

 

இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்குத் தொடக்கம் மோசமாக அமைந்தது. ஜெய் முந்த்ரா 2வது ஓவரில் சஞ்சு சாம்சனை 5 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷனும் 4வது ஓவரில் மேட் ஹாலார்டின் பந்துவீச்சில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயாஸ் ஐயரும் தனது முதல் போட்டியிலேயே சோபிக்கத் தவறினார். இதனையடுத்து பவர்பிளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதில் அபிஷேக் சர்மா மட்டுமே 20 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என அரை சதம் அடித்தார். அவரும் அவுட்டாக மற்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பினர். இதனையடுத்து இந்திய அணி 18. 5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததது. இதனையடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. இது இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்து அணியின் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : IND vs IRE: உள்ளே வரும் வைபவ் சூர்யவன்ஷி.. இந்திய பிளேயிங் லெவனில் வெளியேறப்போவது யார்?

வைபவ் சூர்யவன்சி இல்லாதது பின்னடைவா?

இந்தப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. இதுகுறித்து பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்க முடிவு செய்தோம். சரியான நேரம் வரும்போது சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார். ஒருவேளை சூர்யவன்ஷி இருந்திருந்தால் துவக்தத்தில் அவர் வலுவான ஸ்கோரை அடித்திருக்க கூடும். அது அணிக்கு பெரும் பக்கபலமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us