AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டமார்ர்ர் சத்தத்துக்கு எண்டு கார்டு.. ரோடு ரோலர் மூலம் 1,500 சைலன்சர்கள் அழிப்பு.. கோவை ஆணையர் அதிரடி!

Coimbatore 1500 Silencer Destroyed: கோவை மாவட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட சைலன்சர்களை பொருத்தியிருந்த வாகனங்களில் இருந்து சுமார் 1,500 சைலன்சர்களை போலீசார் பறிமுதல் செய்து ரோடு ரோலர் மூலமாக அழித்தனர்.

டமார்ர்ர் சத்தத்துக்கு எண்டு கார்டு.. ரோடு ரோலர் மூலம் 1,500 சைலன்சர்கள் அழிப்பு.. கோவை ஆணையர் அதிரடி!
கோவையில் சைலன்சர்கள் அழிப்பு
Sekaran S
Sekaran S | Updated On: 26 Jun 2026 21:24 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முக்கிய சாலைகளாக விளங்கி வரும் அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் ஆர். எஸ். புரம் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிநவீன இருசக்கர வாகனங்களில் சைலன்ஸ்கர்களை மாற்றி போக்குவரத்து விதிகளை மீறி அதிக சத்தத்துடன் வாகனங்களை ஓட்டி பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிப்பதாக போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்படி மாநகர போக்குவரத்து புலனாய்வு மற்றும் ஒழுங்கு பிரிவினர் இணைந்து கலந்த 3 மாதங்களாக மாநகரின் முக்கிய சந்திப்புகளில் “ஸ்பெஷல் டிரைவ்” என்ற அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில், இரு சக்கர வாகனங்களில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனையில் சட்ட விதிகளுக்கு புறம்பாக சுமார் 1,500 இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சைலன்சர்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

பி. ஆர். எஸ். மைதானத்தில் குவித்து வைக்கப்பட்ட சைலன்சர்கள்

அவற்றை கோயம்புத்தூர் பி. ஆர். எஸ். மைதானத்தில் மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதனை கோயம்புத்தூர் மாநகர காவல் துறை ஆணையர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வெகு நாட்களாக இடையூறு செய்து வந்த இருசக்கர வாகனங்களின் தடை செய்யப்பட்ட சைலன்ஸ்சர்களை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசாரை வெகுவாக பாராட்டினார். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பைக் சைலன்சர்களை ரோடு ரோலர் இயந்திரம் மூலமாக அழிக்க உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரபல கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு.. வலைவீசிய போலீஸ்!

ரோடு ரோலர் மூலமாக 1,500 சைலன்சர்கள் அழிப்பு

அதன்படி, ரோடு ரோலர் கொண்டு வரப்பட்டு 1,500 பைக் சைலன்சர்கள் மீது ஏற்றி அதனை அழித்தனர். மேலும், மெக்கானிக் ஷாப்களில் பைக்குகளுக்கு சைலன்ஸர்கள் மாற்றிக் கொடுக்கும் மெக்கானிக் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சைலன்ஸர்கள் இல்லாமல் பைக் ரேஸில் ஈடுபடும் மைனர் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும் எனவும் கோவை மாநகர ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போலீசாரின் நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் கோயம்புத்தூரில் மாநகர பகுதியில் கடந்த 3 மாதங்களாக பொதுமக்களையும், நோயாளிகளையும் அச்சுறுத்தும் வகையிலும், அவர்களின் காதை கிழிக்கும் வகையிலும் டமார் என்ற சத்தத்துடன் இயக்கப்பட்டு வந்த இருசக்கர வாகனங்களின் தடை செய்யப்பட்ட சைலன்ஸர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதை அனைத்து தரப்பினரும் வெகுவாக வரவேற்றதுடன், வெகுவாக பாராட்டினர்.

மேலும் படிக்க: ஆளில்லாத காட்டுப்பகுதி.. சிறுமிக்கு 6 பேர் கூட்டு வன்கொடுமை.. கடைசி நேரத்தில் தப்பிய தோழி.. பரபரப்பில் சென்னை!

Follow Us