Ind vs Ire – களமிறங்கும் முன்பே சம்பவம் செய்த வைபவ் – அயர்லாந்து அணி அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 15 வயது வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் முன்பே மிகப்பெரும் சாதனையை செய்துள்ளார். அவருக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியடைந்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 15 வயது வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் முன்பே மிகப்பெரும் சாதனையை செய்துள்ளார். இந்தியா – அயர்லாந்து இடையிலான டி20 போட்டி ஜூன் 26, 2026 இன்று நடைபெறவுள்ள நிலையில் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்துள்ளன. அனைவரும் வைபவின் ஆட்டத்தை காண்பதற்கான ஆர்வமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஐபிஎல் மூலம் கிடைத்த வாய்ப்பு
கடந்த 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 94 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதையும் படிக்க : ENG W vs WI W: பேட்டில் பட்டதா..? விக்கெட் விழுந்ததா..? சர்ச்சையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விக்கெட்.. வைரலாகும் வீடியோ!




தொடர்ந்து அவர் அதிரடி காட்டி வரும் நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இது சிறிய மைதானம் என கூறப்படுகிறது. அங்கு சுமார் 4, 500 முதல் 5,000 ரசிகர்கள் வரை மட்டுமே அமர முடியும். இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷியிம் முதல் சர்வதேச போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். இதனால் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் முழுமையாக விற்றுத்தீர்ந்து விட்டதாக கூரப்படுகிறது.
அயர்லாந்து காத்திருக்கும் சவால்
இந்த தொடரின் ஆரம்பத்தில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம் பிடிப்பா் என்ற யாரும் எதிர்பார்பக்கவில்லை. அதனால் 12 ஆயிரம் பேர் பார்க்க கூடிய டப்ளின் மாலஹைட் மைதானத்திற்கு பதிலாக சிறிய மைதானம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சிறிய மைதானம் என்பதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியைக் காண முடியாமல் ஏறமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பெரிய மைதானத்தில் நடத்தாதது குறித்து அயர்ந்லாந்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிக்க : IND vs IRE: இந்தியா – அயர்லாந்து போட்டி தொடங்க ஒரே நாள்தான்.. அதிரடியாக மாற்றப்பட்ட போட்டி நேரம்.. காரணம் என்ன?
இது தொடர்பாக பேசிய கிரிக்கெட் அயர்லாந்து தலைவர் பிரையன் மக்னீஸ், டிக்கெட் கேட்டு எனது போனுக்கு தொடர்ந்து கால்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எங்களால் 5000 ரசிகர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடியும். பெரிய மைதானமாக இருந்திருந்தால் 3 மடங்களு அதிக டிக்கெட்டுகளை விற்றிருப்போம் என்று வருத்தம் தெரிவித்தார்.