AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2027: டெல்லி அணிக்கு மீண்டும் கேப்டனாகிறாரா ரிஷப் பண்ட்..? உடைந்த ட்விஸ்ட்..!

IPL 2027 Delhi Capitals Captain: கடந்த 2 சீசன்களாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அக்சர் படேல் கேப்டனாக இருந்து வருகிறார். படேலின் தலைமையின் கீழ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறத் தவறிவிட்டது. 2025 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5வது இடத்தையும், 2026 சீசனில் 6வது இடத்தையும் பிடித்தது.

IPL 2027: டெல்லி அணிக்கு மீண்டும் கேப்டனாகிறாரா ரிஷப் பண்ட்..? உடைந்த ட்விஸ்ட்..!
அக்ஸர் படேல் - ரிஷப் பண்ட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jun 2026 19:27 PM IST

ஐபிஎல் 2027 சீசனில் ரிஷப் பண்ட் (Rishab Pant) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்க மாட்டார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்தது. அதற்கு ஈடாக குல்தீப் யாதவை எல்.எஸ்.ஜி. பெற்றது. லக்னோ அணியிடமிருந்து பெற்றதை விட, டெல்லி அணியிடமிருந்து ரிஷப் பண்ட் ரூ. 12 கோடி குறைவாக பேசி முடிக்கப்பட்டது. இதற்கிடையில், வருகின்ற ஐபிஎல் 2027 (IPL 2027) சீசனில் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு கேப்டனாக இருப்பாரா என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. அக்சர் படேலின் அறிக்கை, கேப்டன் பதவி குறித்த அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 சீசன்களாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அக்சர் படேல் கேப்டனாக இருந்து வருகிறார். படேலின் தலைமையின் கீழ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறத் தவறிவிட்டது. 2025 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5வது இடத்தையும், 2026 சீசனில் 6வது இடத்தையும் பிடித்தது.

ALSO READ: முதல் 7 இடங்களில் 4 இடங்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்!

டெல்லி கேப்டனில் மாற்றமா..?


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துள்ளது. அதில், ரிஷப் பண்ட்டை டெல்லி அணிக்கு வரவேற்றதோடு, ஐபிஎல் 2027 தொடரிலும் அவரே கேப்டனாகத் தொடர்வார் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து அக்சர் படேல் கூறுகையில், “ஒரு நண்பனாகவும் கேப்டனாகவும், என் தரப்பிலிருந்தோ அல்லது அணி நிர்வாகத்திடமிருந்தோ அவர் மீது எந்த அழுத்தமும் இருக்காது என்று ரிஷப் பந்திடம் கூறுவேன். இது (டெல்லி அணி) அவருடைய வீடு, மேலும் அவர் பல ஆண்டுகளாக இங்கு விளையாடி வருகிறார். கேப்டன் என்ற முறையில், நான் அவருக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன்.” என்றார்.

ALSO READ: டி20 உலகக் கோப்பை பயணத்தில் சிக்கல்.. வங்கதேசத்தை வீழ்த்த களமிறங்கும் இந்திய மகளிர்..!

டெல்லி அணியில் மாற்றங்கள் இருக்குமா?


ரிஷப் பண்ட்டை தவிர, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், ஐபிஎல் 2027-ல் அணியின் பயிற்சி ஊழியர்கள் மாறவிருக்கின்றனர். அடுத்த சீசனில் சவுரவ் கங்குலி டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராகவும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணையக்கூடும் என்று கூறப்படுகிறது. ரிஷப் பண்ட்டின் வருகைக்குப் பிறகு, கே.எல். ராகுல் அணியில் என்ன பங்கை ஏற்பார் என்பதையும் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us