AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND W vs BAN W: டி20 உலகக் கோப்பை பயணத்தில் சிக்கல்.. வங்கதேசத்தை வீழ்த்த களமிறங்கும் இந்திய மகளிர்..!

IND-W vs BAN-W Match Preview: மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் மோதல்கள் 23 போட்டிகளாக நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணியே தொடரில் தெளிவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்று, 3ல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பையில், இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

IND W vs BAN W: டி20 உலகக் கோப்பை பயணத்தில் சிக்கல்.. வங்கதேசத்தை வீழ்த்த களமிறங்கும் இந்திய மகளிர்..!
இந்திய மகளிர் Vs வங்கதேச மகளிர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jun 2026 18:47 PM IST

2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் (ICC Womens T20 World Cup 2026) ‘ஏ’ பிரிவில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணிக்கு பாதை சற்று கடினமாகியுள்ளது. தற்போது, ​​3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team), 2.511 என்ற நிகர ரன் விகிதத்துடன் 4 புள்ளிகளைப் பெற்று ‘ஏ’ பிரிவு புள்ளி அட்டவணையில் 2வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளில் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்ளும். 2026 ஜூன் 25ம் தேதி மான்செஸ்டர் ஸ்டேடியத்தில் வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி களமிறங்கும். எனவே, டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் சாதனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் விக்கெட் மழை.. ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்த பிடித்த ஸ்ரீ சரணி!

இந்திய அணியே ஆதிக்கம்:

மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் மோதல்கள் 23 போட்டிகளாக நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணியே தொடரில் தெளிவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்று, 3ல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பையில், இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவை அனைத்திலும் இந்திய மகளிர் அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணி இப்போது தனது 100% வெற்றிச் சாதனையைத் தக்கவைக்க இலக்கு வைத்துள்ளது. இந்தப் போட்டி மான்செஸ்டர் ஸ்டேடியத்தில் இந்திய மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்திய அணி மான்செஸ்டர் ஸ்டேடியத்தில் இதுவரை 2 டி20 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றி பெற்று மற்றொன்றில் தோல்வியடைந்துள்ளனர்.

ALSO READ: முதல் 7 இடங்களில் 4 இடங்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்!

இரு அணிகளின் முழு விவரம்:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பார்தி ஃபுல்மாலி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, கிராந்தி தா ரேனு, பிரேமா ரவாட், பிரேமா ரவாட், பிரேமா ரவாட், பிரேமரா ரெட்டி. யாதவ், நந்தினி ஷர்மா, ஸ்ரீ சரணி.

வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணி:

நிகர் சுல்தானா (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நஹிதா அக்தர் (துணை கேப்டன்), திலாரா அக்தர் (விக்கெட் கீப்பர்), ஜுயாரியா ஃபிர்தௌஸ் (விக்கெட் கீப்பர்), ஷோபனா மோஸ்டாரி, தேஜ் நெஹர், ஷர்மின் அக்தர், ரபேயா கான், ரிது ஏ மோனி, ஃஹரினா, ஃபஹரினா, ஷோர்னா மோனி மருஃபா அக்தர், சஞ்சிதா அக்தர் மேகலா, சுல்தானா காதுன்.

Follow Us