AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சச்சினின் 36 ஆண்டுகால சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வைபவ் – எகிறும் எதிர்பார்ப்பு

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்குவதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைக்கிறார். தனது அறிமுகப் போட்டியில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டு கால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சச்சினின் 36 ஆண்டுகால சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வைபவ்  – எகிறும் எதிர்பார்ப்பு
சச்சின் டெண்டுல்கர் - வைபவ் சூர்யவன்ஷி
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Jun 2026 17:09 PM IST

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ஜூன் 26, 2026 இன்று அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்குவதன் மூலம் அவர் சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைக்கிறார். இவர் தனது அறிமுகப்போட்டியில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி, இந்தியாவில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகும் மிக இள வயது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். தற்போது வைபவ் சூர்யவன்ஷியின் வயது 15 வயது 91 நாட்கள். இதற்கு முன்பு கடந்த 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய சச்சினின் வயது 16 ஆண்டுகள் 205 நாட்களாகும். இதனையடுத்து சச்சினின் சாதனையை அவர் முறியடிக்க காத்திருக்கிறார்.

இதையும் படிக்க : IND vs IRE: உள்ளே வரும் வைபவ் சூர்யவன்ஷி.. இந்திய பிளேயிங் லெவனில் வெளியேறப்போவது யார்?

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரித்வி ஷா தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த டீனேஜ் வீரராக அவர் அறியப்பட்டார். இந்த சாதனையையும் அவர் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஐபிஎல்லில் மிரட்டிய வைபவ்

2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, மொத்தம் 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார். மேலும், 237க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர், ஒரே தொடரில் 72 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.

இந்தியா ஏ’ அணியிலும் அதிரடி

ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய அவர் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில், இலங்கை ஏ அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் 11 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், இந்தியா ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இதையும் படிக்க : ENG W vs WI W: பேட்டில் பட்டதா..? விக்கெட் விழுந்ததா..? சர்ச்சையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விக்கெட்.. வைரலாகும் வீடியோ!

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் முன்பே உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us