AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறுவயது மகனுக்கு மது ஊற்றி கொடுத்த தந்தை… வீடியோ வைரலானதால் கம்பி எண்ணிய தகப்பன்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

T Kallupatti Police Arrested Father: மதுரை மாவட்டத்தில் சிறுவயது மகனுக்கு மது ஊற்றி கொடுத்து அருந்த வைத்த தந்தையை வீடியோ காட்சிகளின் அடிப்படையில் டி. கல்லுப்பட்டி போலீசார் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

சிறுவயது மகனுக்கு மது ஊற்றி கொடுத்த தந்தை… வீடியோ வைரலானதால் கம்பி எண்ணிய தகப்பன்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!
சிறுவயது மகனுக்கு மது கொடுத்த தந்தை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 03 Jul 2026 20:24 PM IST

தமிழகத்தில் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வைரலாக பரப்பப்பட்டு வந்தது. அந்த வீடியோவில், இருள் சூழ்ந்த ஒரு பகுதியில் ஒரு இளைஞரும் அவரது அருகில் ஒரு சிறுவனும் மது அருந்துவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், மதுரை அருகே உள்ள டி. கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மது போதைக்கு அடிமையான நிலையில் சம்பவத்தன்று இரவு, பொது இடத்தில் தனது சிறு வயது மகனுடன் மது அருந்தியது தெரியவந்தது. அப்போது, அவர் கையில் மது பாட்டிலுடன் மது அருந்தி உள்ளார். அப்போது, உடன் இருந்த தனது சிறு வயது மகனுக்கும் மதுவை கொடுத்து குடிக்குமாறு கூறியுள்ளார்.

மது அருந்திய தந்தையை கண்டித்த நபர்கள்

அப்போது, அந்தப் பகுதி வழியாக சென்றவர்கள் பாண்டியராஜனிடம் சிறுவனுக்கு எதற்காக மது கொடுக்கிறாய் என்று சத்தம் போட்டு உள்ளனர். அதற்கு, அவன் ஏற்கனவே மது அருந்துவான். அவன் எனது மகன், நான் நினைத்தால் அவனுக்கு மது கொடுப்பேன் என்று அடாவடியாக பேசியுள்ளார். இதனால், அந்த நபருக்கும், தட்டிக் கேட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறு பிள்ளைக்கு எதற்காக மது கொடுக்கிறீர் என்று கோபத்துடன் தண்டித்துள்ளனர். ஆனால், பாண்டியராஜன் சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி என் பிள்ளைக்கு நான் கொடுக்கிறேன்.

மேலும் படிக்க: 3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!

என்னை தட்டி கேட்பதற்கு நீ யார்

இதை தட்டிக் கேட்பதற்கு நீ யார் என்று பொறுப்பெற்ற முறையில் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், இதனை ஒரு சாதாரண செயல் என்றும் பாண்டியராஜன் நியாயப்படுத்தியுள்ளார். அப்போது, தனது மனைவிக்கு போன் செய்த பாண்டியராஜன் வீட்டில் இருந்த பீரை எடுத்து வந்து குடித்துக் கொண்டிருக்கிறோம். அப்போது தனது மகனுக்கும் பீர் கொடுத்தேன். இதனை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து என்னிடம் தகராறு செய்கிறார்கள் என்று மனைவியிடம் புகார் தெரிவிக்கிறார்.

 

குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

அத

ற்கு, அவரது மனைவியும் பெரிதளவில் ஆட்சேபனை தெரிவிக்காமல் பேசுகிறார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வந்த நிலையில், டி. கல்லுப்பட்டி போலீசார் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: மின் நிறுத்தம் அலர்ட்.. தென்காசி மாவட்டத்தில் நாளை பவர் கட்.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Follow Us