விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. வெங்காயத்தின் கொள்முதல் விலையை உயர்த்திய மத்திய அரசு!
Onion procurement price hiked by central government | வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் நல்ல லாபத்தை பெறும் வகையில், வெங்காயத்தின் கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதாவது முன்பு இருந்ததை விட சுமார் 13.3 சதவீதம் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது.
சென்னை, ஜுலை 05 : வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் நல்ல லாபத்தை பெறும் வகையில் , மத்திய அரசு (Central Government) ஒரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, வெங்காயத்தின் கொள்முதல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. முன்பு இருந்ததை விட சுமார் 13.3 சதவீதம் வரை வெங்காயத்தின் கொள்முதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெங்காயத்தின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெங்காயத்தின் கொள்முதல் விலையை உயர்த்திய அரசு
முன்பு ஒரு குவிண்டாலுக்கு, அதாவது 100 கிலோ ரூ.1,875-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெங்காயத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு, நேற்று (ஜூலை 04, 2026) முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிதியாண்டில் வெங்காயத்தின் உறபத்தி 3.07 கோடி டன்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சம்மான அளவையே கொண்டுள்ளது.
இதையும் படிங்க : தங்கத்தில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. கை நிறைய லாபத்தை அள்ளலாம்.. கோட்டக் செக்யூரிட்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு!




பாற்றாக்குறையே விலை உயர்வுக்கு காரணம் – அரசு விளக்கம்
தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது, சில பகுதிகளில் போதிய அளவில் மழை பொழியாதது, வியாபாரிகள் சிலர் வெங்காயத்தை வணிக அடிப்படையில் வாங்கி சேமிக்க தொடங்கியதே சமீபத்திய விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக அமைந்தன என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.