AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Nadu Weather Update | தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜுலை 05, 2026) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Jul 2026 06:51 AM IST

சென்னை, ஜூலை 05 : தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 05, 2026) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், இந்த பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த பாதை நிலவுகிறது. இது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை அடையக்கூடும் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : இவர் தான் என் குழந்தைக்கு அப்பா – சிறுமியின் பொய் குற்றச்சாட்டு – 2 ஆண்டுகள் போராடி வெளியே வந்த சேலம் இளைஞர்

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 05, 2026) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

ஜூலை 10 வரையிலான வானிலை நிலவரம்

நாளை (ஜூலை 06, 2026) முதல் ஜூலை 10, 2026 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்தும், இயல்பை ஒட்டியும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குதிரை பேரம் நடத்தும் தவெக – தமிழக ஆளுநரிடம் திமுக பரபரப்பு புகார்

நாளை முதல் ஜூலை 08 வரையிலான நிலவரம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஜூலை 06, 2026) முதல் ஜூலை 08, 2026 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us