AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் இருந்து திருச்சிக்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்.. தமிழகத்தின் 2வது பெரிய விரைவுச்சாலை பணிகள் தொடக்கம்!

Chennai - Trichy Travel Time Reduced To 3 Hours | தற்போதுள்ள நிலவரப்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகும். இந்த நிலையில், அது விரைவில் 3 மணி நேரமாக குறைய உள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்.. தமிழகத்தின் 2வது பெரிய விரைவுச்சாலை பணிகள் தொடக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 05 Jul 2026 07:26 AM IST

சென்னை, ஜூலை 05 : சென்னையில் (Chennai) இருந்து திருச்சிக்கு (Trichy) இனி விரைவில், வெறும் மூன்று மணி நேரத்தில் பயணம் செய்யலாம். அதாவது, சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்ய சுமார் 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய விரைவுச்சாலை திட்ட பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் பயண நேரம் குறைந்து வெறும் மூன்று மணி நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்ய முடியும். இந்த விரைவுச்சாலை திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி சென்னையில் இருந்து திருச்சி செல்ல வெறும் 3 மணி நேரம்

சென்னையில் இருந்து திருச்சிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தில் விரைவுச்சாலை அமைக்கும் திட்ட பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது. சுமார் ரூ.20,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், தமிழ்நாட்டின் 2வது மிகப்பெரிய தேசிய விரைவுச்சாலையாக அமைய உள்ளது. இதற்கு முன்னதாக சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்? பரபரப்பு தகவல்

மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்

சென்னை – திருச்சி இடையே அமைய உள்ள இந்த புதிய விரைவுச்சாலையில் வாகனங்கள் மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யலாம். தற்போதுள்ள நிலவரப்படி சென்னை – திருச்சி இடையே பயணம் செய்ய சுமார் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தேவைப்படுகிறது. ஆனால், இந்த விரைவுச்சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பயண நேரம் பாதியாக குறையும். அதாவது வெறும் 3 மணி நேரமாக குறையும்.

இதையும் படிங்க : இவர் தான் என் குழந்தைக்கு அப்பா – சிறுமியின் பொய் குற்றச்சாட்டு – 2 ஆண்டுகள் போராடி வெளியே வந்த சேலம் இளைஞர்

இந்த சென்னை – திருச்சி புதிய விரைவுச்சாலை தமிழகத்தில் 12 மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படும். இதன் காரணமாக 12 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைய உள்ளனர். இந்த சாலை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகள் உடன் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us