Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவாரா? – எடப்பாடி பழனிசாமியின் பதிலால் பரபரப்பு

EPS clear response to OPS: செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இணைய நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ரெடியா என கேள்வி எழுப்பியிரு்தார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவாரா? – எடப்பாடி பழனிசாமியின் பதிலால் பரபரப்பு
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Jan 2026 15:36 PM IST

சென்னை, ஜனவரி 29 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. கடந்த வாரம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) இணைந்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவருடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணையவுள்ளாரா என அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கேற்ப ஜனவரி 29, 2026 அன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இணைய நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ரெடியா என கேள்வி எழுப்பியிரு்தார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

‘வாய்ப்பே இல்லை’

அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் பேசிய நிலையில், இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டு, ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதனால் அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பேசினார். இது அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?

முன்னதாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவின் தொண்டர்களை மீட்க சட்டபோராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் நான் போட்டியிட காரணம் எங்கள் பக்கம் எவ்வளவு தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டத்தான் என்றார்.

இதையும் படிக்க : நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்

என்டிஏ கூட்டணியில் இணைவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விருப்பம்

மேலும் பேசிய அவர், அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா எப்படி உருவாக்கினாரோ அப்படி உருவாக்குவது தான் எங்கள் நோக்கம். ஆனால் தேவையில்லாமல் குழப்பம் உருவாக்கப்படுகிறது. தேனி மாவட்டம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை முதல்வர்களா உருவாக்கிய மாவட்டம். பிரிந்து கிடந்த அதிமுகவை மீண்டும் இணைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இன்றைக்கு அதிமுக வெற்றி பெறவேண்டும் என டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்கள். எதிரும் புதிருமாக இருந்தவர்கள் தற்போது இணைந்து தேர்தலை சந்திக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எஹ்களையும் இணைக்கலாம். அது நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றிபெரும் என்று பேசினார்.