AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: திரளும் பக்தர்கள்..

Festival at Thirunallar Dharbaranyeswarar Temple: காரைக்கால் திருநள்ளாறில் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயரும் உலகப் புகழ்பெற்ற சனிப்பெயர்ச்சி விழா நாளை (மார்ச் 06, 2026) காலை 8.24 மணிக்கு மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: திரளும் பக்தர்கள்..
சனிப்பெயர்ச்சி விழாImage Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Mar 2026 17:00 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா 2026 மார்ச் 06 நாளை வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்குச் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்வதை முன்னிட்டு மிக விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த ஆன்மிக நிகழ்வை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு மற்றும் வசதிகளை ஆய்வு செய்துள்ளதோடு, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய 15 இடங்களில் டிக்கெட் கவுண்டர்கள், மூன்று வகையான கட்டண வரிசைகள் மற்றும் தடையற்ற இலவச தரிசன ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலம்

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் அமைந்துள்ள திருநள்ளாறில் உலகப் பிரசித்திப் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

நாளை சனிப்பெயர்ச்சி விழா

இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதன்படி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

Also Read: சனி பகவானின் அருள் கிடைத்ததைக் காட்டும் அறிகுறிகள் என்னென்ன?

அதிகாரிகள் ஆய்வு

விழா ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட கலெக்டர் இஷிதா ரதி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜைகள் மற்றும் தரிசன ஏற்பாடு

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய இலவச தரிசனம் மற்றும் 3 வகையான கட்டண தரிசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலவச தரிசன வரிசை மற்றும் கட்டண சிறப்பு தரிசன வரிசை தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெறுவதற்காக 15 இடங்களில் கவுண்டர்கள் செயல்படுகின்றன. அதிகளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நளன் குளம் சீரமைப்பு

நளன் குளத்தில் பக்தர்கள் சவுகரியமாக நீராடும் வகையில் முழுமையாக சீரமைத்து புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. இது பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாகக் கூறப்படுகிறது.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு

விழாவை முன்னிட்டு 1070 மற்றும் 1077 ஆகிய இலவச கட்டுப்பாட்டு அறை எண்கள் செயல்படுகின்றன. அவசர உதவிக்காக 83002-61071 என்ற செல்போன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகை; போலீஸ் பாதுகாப்பு

2026 மார்ச் 06 நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதால், திருநள்ளாறு கோவிலுக்கு பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். அங்குள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வருகின்றன. அதிகளவு பக்தர்கள் வருவதை முன்னிட்டு கோவில் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Follow Us