கில்லி ரீ-ரிலீஸ் சாதனையை முறியடித்தா மங்காத்தா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
Mankatha vs Ghilli Re-release Records: தளபதி விஜய்யின் நடிப்பில் கடந்த 2004ல் வெளியான படம் கில்லி. இப்படம் கடந்த 2024ம் ஆண்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழகத்திலே அதிகம் வரவேற்கப்பட்ட ரீ-ரிலீஸ் என்ற சாதனையை படைத்திருந்தது. இதை சமீபத்தில் வெளியான அஜித் குமாரின் மங்காத்தா ரீ-ரிலீஸ் முறியடித்ததாக கூறப்படுகிறது.
அஜித் குமார் (Ajith Kumar) மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) கூட்டணியில் கடந்த 2011ம் ஆண்டில் வெளியான திரைப்படம் மங்காத்தா (Mankatha). இப்படத்தில் நடிகர் அஜித் குமார் நெகடிவ் கலந்த ஒரு ஹீரோ வேடத்தில் நடித்திருந்தார். இதில் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan), அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி மற்றும் மகத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த 2026ம் ஆண்டுடன் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று 2026 ஜனவரி 23ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்திருந்த நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு உட்பட படக்குழுவினரும் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியிருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் ரீ-ரிலீஸ் டிக்கெட் முன் பதிவில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கில்லி (ghilli) படத்தின் டிக்கெட் பதிவை முறியடித்துள்ளதாகவும், மேலும் படமானது முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் சுமார் ரூ 2.20 கோடியை வசூலித்துள்ளதாகவும் இணையதளத்தில் தகவல்கள் பரவிவருகிறது.




இதையும் படிங்க: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட சென்சார் வழக்கு – தீர்ப்பு எப்போது?
மங்காத்தா மற்றும் கில்லி ரீ- ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
Ghilli | Re-Release💥🔥#Ghilli – 61.62K tickets sold on day 1 #Mankatha – 49.92K tickets sold on day 1 pic.twitter.com/n5CidC37s4
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 24, 2026
தளபதி விஜய்யின் கில்லி படமானது வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பின் 2024ம் ஆண்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்த முதல் நாளிலே ரூ 2.15 கோடிகளை தமிழகத்தில் மட்டுமே வசூலித்திருந்தது. இந்த படத்தை விடவும் கிட்டத்தட்ட 25 சதவீதமாக ரூ 2.20 கோடிகளை வசூலித்துள்ளதாம். ஆகையால் தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படத்தில் முதல் நானிலே இதுவே அதிகம் வசூல்செய்த படம் என கூறப்படுகிறது. ஆனால் டிக்கெட் விற்பனை வாரியாக பாரத்தால் தளபதி விஜய்யின் கில்லி பட ரீ- ரிலீஸின்போதுதான் அதிகம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு அதன் மீது எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை – ஓபனாக பேசிய விஜய் சேதுபதி!
தளபதி விஜய்யின் கில்லி படத்திற்கு இருந்தது போலவே அஜித் குமாரின் மங்காத்தா பட ரீ- ரிலீசிற்கும் வரவேற்புகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இரு படங்களை ஒப்பிடும்போது, இரண்டுமே ஒரே அளவிலே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் அஜித் குமாரின் மங்காத்தா படத்தை ஒப்பிடும்போது தளபதி விஜய்யின் கில்லி பட ரீ- ரிலீஸ் மக்களிடையே அதிகம் கொண்டாடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.