Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SVC59: விஜய் தேவரகொண்டா- கீர்த்தி சுரேஷின் புது பட கிளிம்ப்ஸ் வெளியானது.. டைட்டில் இதுதானா?

SVC59 Movie Title Teaser: தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் உருவாகிவரும் 15வது படம்தான் தற்காலிகமாக SVC59 என அழைக்கப்பட்டுவந்தது. அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 22ம் தேதியில் இப்படத்தின் டைட்டில் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.

SVC59: விஜய் தேவரகொண்டா- கீர்த்தி சுரேஷின் புது பட கிளிம்ப்ஸ் வெளியானது.. டைட்டில் இதுதானா?
விஜய் தேவரகொண்டாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Dec 2025 19:58 PM IST

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் (Vijay Deverakonda) நடிப்பில் தெலுங்கு தமிழ், மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் தற்போது தெலுங்கு மொழி படங்களில் நடித்தில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கிங்டம் (Kingtom). இந்த படமானது கடந்த 2025 ஜூலை இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காந்தா பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருந்தார் . இப்படத்தை அடுத்து இயக்குநர் ரவி கிரண் கோலா (Ravi Kiran Kola) இயக்கத்தில் இவர் இணைந்துள்ள படம்தான் SVC59. இப்படமானது தற்காலிகமாக SVC59 என அழைக்கப்பட்டுவந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள், கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இணையத்தில் வைரலாகிவந்த தகவல் உண்மையாகியுள்ளது. இப்படத்திற்கு படக்குழு “ரௌடி ஜனார்தனா” (Rowdy Janardhana) என டைட்டிலை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் இப்படியிருக்க விஜய் சார்தான் காரணம்.. அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்- தயாரிப்பாளர் லலித் குமார் பேச்சு!

விஜய் தேவரகொண்டாவின் புது பட டைட்டில் கிளிம்ப்ஸ் பதிவு :

இந்த முன்னோட்டத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. உடல் முழுவதும் ரத்த கரைகளுடன், கையில் பெரிய அரிவாளுடன் விஜய் தேவரகொண்டா பேசுவது போல உள்ளது. அதில் அவர் ரௌடி ஜனார்தன் என்ற வேடத்தில் நடிக்கிறார் என்பதும் உறுதியாக தெரிகிறது. இந்த படமானது உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறதாம். விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரௌடி ஜனார்தனா திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த ரௌடி ஜனார்தனா திரைப்படத்தை இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தில் ராஜு தயாரித்துவருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசையமைப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சி…!

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷுடன் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துவருகிறார் என கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் முக்கிய வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகி வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.