Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Seeman: 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி யாருடன்..? இயேசு மேல் ஆணை.. சீமான் கொடுத்த ட்விஸ்ட்!

Assembly elections 2026: தேமுதிக, பாமக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை எந்த கட்சியுடன் எப்போது கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

Seeman: 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி யாருடன்..? இயேசு மேல் ஆணை.. சீமான் கொடுத்த ட்விஸ்ட்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Oct 2025 15:01 PM IST

சென்னை, அக்டோபர் 11: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வென்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்று திமுக, அதிமுக (ADMK), நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடுமையாக போட்டியிடுகின்றனர். இந்தநிலையில், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்துடன் ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. தேமுதிக, பாமக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi) போன்றவை எந்த கட்சியுடன் எப்போது கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

ALSO READ: அதிமுக – தவெக கூட்டணி? பாஜகவை கழட்டிவிடும் இபிஎஸ்.. புயலை கிளப்பும் தினகரன்!

2026ம் ஆண்டில் யாருடன் கூட்டணி..?

சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் கிருத்துவ நீதி பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீமான் கூட்டணி குறித்து பேசினார். அதில், “பலரும் என்னிடத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்வி எழுப்புகிறார்கள். நான் அவர்களுடன் கூட்டணி வைப்பதாக இருந்தால் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவு அழுத்தம் இருந்திருக்கும், அப்போதே வைத்திருக்க மாட்டேனா..? வாக்கு சதவீதம் அரை விழுக்காடு, கால் விழுக்காடு இருக்கும் கட்சிகளுடனே பாஜக பேசும்போது, 8.5 விழுக்காடு வாக்கு சதவீதம் வைத்துள்ள எங்களிடம் கூட்டணி பேசி இருப்பார்களா இல்லையா..? எங்களுடைய தத்துவம் கட்சி தொடங்கிய 2010ம் ஆண்டில் எந்த மதத்திற்கு சார்பாகவும் இல்லாமல், எந்த சாதிக்கும் சார்பாகவும் இல்லாமல் தமிழ், தமிழர், மொழி, இனமாக என வலிமை பெறுகிறோம். இதுதான் எங்களது அடையாளம், நாம் எந்த மாநிலம் சென்றாலும், எந்த நாட்டிற்கு சென்றாலும் நாம் தமிழர் என்றே அடையாளப்படுவோம்.

ALSO READ: தவெகவுடன் கூட்டணி… அதிமுக பரப்பும் வதந்தி.. போட்டு உடைத்த திருமாவளவன்

எங்கு இருப்பினும் தமிழர் தமிழரே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என தமிழில் பாடப்பட்டுள்ளது. அதன்படி, நாம் தமிழர் கட்சி திராவிட கட்சி, இந்திய கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி வைக்காது. அந்த நிலைப்பாட்டில் 15 ஆண்டுகளாக இன்றும் நிற்கிறேன். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுவோம். அதில், 117 பேர் பெண்கள், 117 பேர் ஆண்கள் என சம அளவில் போட்டியிட செய்வோம். இறைமகன் இயேசு மேல் ஆணையாக எவரோடும் கூட்டணி கிடையாது” என்று தெரிவித்தார்.