Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘ வலியில் இருக்கிறோம்.. 16 நாள் காரியம் முடிந்ததும் பேசுவோம்’ ஆதவ் அர்ஜுனா உருக்கம்!

TVK Rally Stamepede : 16 நாள் காரியம் முடிந்ததும் உண்மையை வெளியே சொல்வோம் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்துள்ளார். எங்கள் தலைவர் உட்பட அனைவரும் யாரும் பேச முடியாத அளவுக்கு மிகுந்து வலியோடு இருந்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

‘ வலியில் இருக்கிறோம்.. 16 நாள் காரியம் முடிந்ததும் பேசுவோம்’ ஆதவ் அர்ஜுனா உருக்கம்!
ஆதவ் அர்ஜுனா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 11 Oct 2025 07:10 AM IST

சென்னை, அக்டோபர் 11 :  சென்னையில் பேட்டி அளித்த ஆதவ் அர்ஜுனா, யாரும் பேச முடியாத அளவுக்கு மிகுந்த வலியில் இருப்பதாகவும், 16 நாட்கள் காரியம் முடிந்ததும் உண்மையை வெளியில் சொல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லி இருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பரப்புரை கூட்டம் நடந்தது. இந்த பரப்புரையில் கூட்டத்தில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள், தொண்டர்கள் கூடி இருந்தனர். அப்போது விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில், ஐஜி அஸ்ராக் கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தலையீட்டு, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Also Read : அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி.. ஒரே வார்த்தையில் ஓபனாக சொன்ன அண்ணாமலை..

’16 நாள் காரியம் முடிந்ததும் உண்மையை சொல்வோம்’


விரைவில் கரூருக்கு விஜய் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளார். இதற்காக அவர் பாதுகாப்பு கோரியுள்ளார். இதற்கிமையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு சென்றிருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு சென்ற அவர், 2025 அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று இரவு சென்னைக்கு வருகை தந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார. அப்போது பேசிய அவர், ”நம் குடும்பத்தில் இழப்பு ஏற்படும் போது 16 நாட்கள் துக்கத்துடனும் வலியுடனும் இருப்போம். அதுபோல 41 பேர் இறந்து நேற்றுடன் 14 நாட்கள் ஆனது. யாரும் பேச முடியாத அளவுக்கு வலியில் இருக்கின்றோம்.

16 நாட்கள் காரியம் முடியும் வரை யாரும் பேச மாட்டோம். 16 நாட்கள் காரியம் முடிந்தவுடன் உண்மைகளை வெளியே கண்டிப்பாக சொல்வோம். அதற்கு இடையில் பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி எங்கள் நிர்வாகிகளை கைது செய்து வருகின்றனர். தவெக கட்சியை முடக்க நினைக்கிறார்கள். இந்த நேரத்தில் நீதித்துறையை நாடி உண்மையை வெளியே கொண்டு வருவதற்கான சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

Also Read : கரூர் வழக்கில் திருப்பம்… தவெக மாவட்ட செயலாளரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி – வெளியான பரபரப்பு தகவல்

16 நாள் காரியம் முடிந்ததும் மக்களை சந்திப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒரு சாமானிய மனிதனாக நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் உண்மை வெளிவரும். எங்கள் மீதான அவதூறுகள், தவறான செய்திகள் குறித்து பேசுவதற்கு நான் தயாராக இல்லை” என்றார்.