Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை’ உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்.. நீதிபதி அடுக்கடுக்கான கேள்வி!

Karur TVK Rally Stampede Case : கரூர் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தன்று விஜய் அங்கிருந்து தப்பி ஓடவில்லை என்றும் காவல்துறை அறிவுறுத்தலின் பேரின்தான் அவர் வெளியேறியதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பும் வாதிட்டது.

‘கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை’ உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்.. நீதிபதி அடுக்கடுக்கான கேள்வி!
உச்ச நீதிமன்றம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Oct 2025 13:45 PM IST

டெல்லி, அக்டோபர் 10 :  கரூர் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில, சம்பவத்தன்று விஜய் அங்கிருந்து தப்பி ஓடவில்லை என்றும் காவல்துறை அறிவுறுத்தலின் பேரின்தான் அவர் வெளியேறியதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பும் வாதிட்டது.  2025 செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பரப்புரை கூட்டம் நடந்தது. இந்த பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையீட்டு ஐஜி அஸ்கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அஸ்ராக் கார்க் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 2025 அக்டோபர் 10ஆம் தேதியான இன்று நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.  அதாவது,  உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது எப்படி? உயர் நீதிமன்றமும், அதன் கிளையும் ஒரே நாளில் இரு வேறு விதமான உத்தரவுகளை பிறப்பித்தது எப்படி?

Also Read : கரூர் சம்பவத்தில் பரபரப்பு… தவெக தொண்டர் நீதிமன்றத்தில் சரண் – என்ன நடந்தது?

உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்

ஒரே நாளில் இரு வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன; இது என்ன மாதிரியான நடைமுறை. கரூர் வழக்கை மதுரை கிளை விசாரிக்காமல், சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன். மதுரை கிளையில் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதே, சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுதது வேறு வேறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்? கிரிமினல் வழக்காக கருதப்பட்டது ஏன்? கரூர் விவகாரம் சென்னை முதன்மை அமர்வுக்கு அல்ல, மதுரை அமர்வுக்கு உட்பட்டது” நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து,  விசாரணையின்போது தவெக தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் கூறுகையில், “என் வழக்கை விசாரிக்காமலேயே உயர்நீதிமன்றம் என் மீது பழி சுமத்தியது. எனது கருத்தைக் கேட்க வாய்ப்பளிக்காமல், கூட்டக் கட்டுப்பாட்டு நெறிமுறையை மீறியதற்காக உயர்நீதிமன்றம் என்னைக் குறை கூறுகிறது. தவெக தலைவர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடிப்போனதாக உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி காவல்துறை அறிவுறுத்தியது.

அரசு தரப்பு வாதம்

அதனால், விஜய் கரூரில் இருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவக்கூட எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அரசியல் ரீதியாக மோசமானது. உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். எங்களுக்கு அதன் மீது முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

Also Read : வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் – தவெக நிர்வாகி ராஜ்மோகன் வேதனை

தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறுகையில், “சிலர் சிபிஐ விசாரணையை கோருகின்றனர். அஸ்ரா கார்க் ஒரு நல்ல அதிகாரி. உயர்நீதிமன்றமே அவரைத் தேர்ந்தெடுத்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு விஜய் பரப்புரைக்கு வரவில்லை. அதிகாலையில் இருந்தே கூட்டம் கூடியது. விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்கு காரணம். உயிரிழந்தவர்களின் உறவினர்களை விஜய் சென்று பார்க்கவில்லை” என வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.