Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் செல்ல அனுமதி எதற்கு? அந்த சூழல் தமிழ்நாட்டில் இல்லை – விஜய்க்கு எதிராக கேள்வி எழுப்பிய அண்ணாமலை

Karur Stampede : கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்டு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், கரூர் செல்ல அனுமதி எதற்கு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியிருப்பது நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு முரணாக அமைந்துள்ளது.

கரூர் செல்ல அனுமதி எதற்கு? அந்த சூழல் தமிழ்நாட்டில் இல்லை – விஜய்க்கு எதிராக கேள்வி எழுப்பிய அண்ணாமலை
விஜய் - அண்ணாமலை
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Oct 2025 19:53 PM IST

கரூர் (Karur) கூட்ட நெரிசல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காத நிலையில் வீடியோ கால் மூலம் பேசி அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார். இந்த நிலையில் விரைவில் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு விஜய் டிஜிபி அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் விஜய்யின் திட்டங்களைக் கேட்டு டிஜிபி அலுவலகம் பதில் கடிதம் அளித்துள்ளது.  விஜய் கரூரில் ஒரு திருமண மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் கரூர் செல்ல விஜய் ஏன் அனுமதி வாங்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் செல்ல ஏன் அனுமதி?

இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் செல்ல விஜய் டிஜிபியிடம் அனுமதி கேட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் செல்லலாம். காவல்துறை மற்றும் அவரது கட்சி தொண்டர்களிடம் தகவல் அளித்துவிட்டு அவர் செல்லலாம். தவெக தலைவர் விஜய் கரூருக்கு செல்ல காவல்துறையின் அனுமதி எதற்கு? என்னைப் பொறுத்தவரை டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் சூழல் இல்லை.

இதையும் படிக்க : வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் – தவெக நிர்வாகி ராஜ்மோகன் வேதனை

அரசியல் தலைவர்கள் தைரியமாக செல்லலாம். ஒரு நாள் முன்பு தகவல் சொல்லிவிட்டு செல்லலாம். நானும் கரூரை சேர்ந்தவன் தான். முதல்வர்கள் தொடங்கி அண்ணன் கமல்ஹாசன் வரை அனைவரும் வருகிறார்கள். கரூர் மக்கள் பூதாகரமானவர்கள் அல்ல. யாரையும் பார்க்க வேண்டுமானால் வந்து பாருங்கள். கரூர் மக்கள் அன்பானவர்கள் என்றார்.

இதையும் படிக்க : ‘ அண்ணனாக இருந்து எல்லாவற்றை செய்வேன்.. விரைவில் சந்திப்பேன் ‘ – வீடியோ காலில் பேசிய விஜய்..

நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு எதிராக பேசிய அண்ணாமலை

முன்னதாக திருநெல்வேலி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய் கரூருக்கு சென்றால் தள்ளுமுள்ளு ஏற்படும். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? கரூர் சென்றால் விஜய் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் தான் அவர் காவல்துறை பாதுகாப்பு கேட்டிருக்கிறார். என்றார். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் விஜய்க்கு ஆதரவாக பேசிய நிலையில், திடீரென விஜய்க்கு எதிராக அண்ணாமலை கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.