காசு இருந்தா… திருச்செங்கோட்டில் பரப்புரை – அசுரன் பட வசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி
Edappadi Palaniswami Quotes Asuran: அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோட்டில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கல்வி குறித்து பேசிய அவர் அசுரன் பட வசனத்தை மேற்கோள் காட்டி பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அக்டோபர் 8, 2025 அன்று திருச்செங்கோட்டில் மக்கள் முன் பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் சாலை வசதிகள் செய்யப்படன எனவும் திமுக ஆட்சியில் அப்படி ஒன்றும் செய்யவில்லை எனவும் திமுக ஆட்சியில் சாலை வசதிகள் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும் அசுரன் படத்தில் கல்வி குறித்து தனுஷ் பேசும் வசனத்தை மேற்கோள் காட்டி பேசினார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
திருச்செங்கோடு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது உரையில், திமுக ஆட்சியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதிமுக ஆட்சியில் பல சாலைப் பணிகள், மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
இதையும் படிக்க : அண்ணாமலை போன்றவர்கள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.. இது தான் நடந்தது – திருமாவளவன் விளக்கம்..
ஆனால் திமுக எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் விளம்பரம் மட்டுமே செய்கிறது. திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் தெருவில் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு எந்த துரோகமும் செய்யவில்லை என்றார்.
திருச்செங்கோட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி
#திருச்செங்கோடு தொகுதி மக்கள் எழுச்சியுற அளித்த வரவேற்பிற்கு இடையே உரையாற்றினேன்.
“செயலாட்சி” என்று சொல்லும் பொம்மை முதல்வரின் செயல்கள் இரண்டே இரண்டு தான்-
ஒன்று, பெயர் வைப்பது.
மற்றொன்று பெயரை மாற்றுவது.தயவுசெய்து, பெற்றோரை அன்போடு அழைக்கும் “அப்பா- அம்மா” ஆகிய சொற்களை… pic.twitter.com/Y1jxME3fcu
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 8, 2025
இதையும் படிக்க : மதுரையில் நயினார் பரப்புரை.. கடும் நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி!
அசுரன் பட வசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி
மேலும், கல்வி குறித்து பேசிய அவர் அசுரன் படத்தில் தனுஷ், காடு இருந்தா பிடுங்கிடுவாங்க, நம்மிடம் இருந்து கல்வியை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற வசனத்தை மேற்கோள்காட்டிய அவர், அதிமுக ஆட்சியில் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், அரசு பள்ளிகள் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சியில் புதிதாக எந்த கல்வி நிறுவனம் தொடங்கவோ, வேலைவாய்ப்பு உருவாக்கவோ செய்யவில்லை. ஆனால் அதற்கு மாறாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறது என்றார்.