Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆட்சியை விமர்சிப்பது கிரிமினல் குற்றமா? வழக்கை ரத்து பண்ணுங்க – உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு

Karur Stampede : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கரூர் கட்ட நெரிசல் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆட்சியை விமர்சிப்பது கிரிமினல் குற்றமா? வழக்கை ரத்து பண்ணுங்க – உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு
ஆதவ் அர்ஜூனா
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Oct 2025 21:21 PM IST

கரூரில் (Karur) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதன் பிறகு விஜய் தமிழக வெற்றிக் கழகத்தினர் இந்த ச்ம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்திக்கவில்லை. விஜய் மட்டும் 3 நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவிக்கும் விதமாக பேசியிருந்தார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலமாக பேசிய விஜய், கரூர் செல்வதற்காக டிஜிபியிடம் அனுமதி கேட்டிருந்தார். இது குறித்து விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதவ் ஆர்ஜுனா மனு

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், என் எக்ஸ் தள பதிவை உடனடியாக நீக்கிவிட்டேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் குறித்து காவல்துறை முழுமையாக கவனம் செலுத்தவில்லை. ஆட்சியை விமர்சிப்பது கிரிமினல் குற்றத்திற்கு சமமானதல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :கரூர் சம்பவத்தில் பரபரப்பு… தவெக தொண்டர் நீதிமன்றத்தில் சரண் – என்ன நடந்தது?

நீதிமன்றம் கேள்வி

முன்னதாக ஆதவ் அர்ஜுனாவின் எக்ஸ் தள பதிவு குறித்து உயர்நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது. அதில் ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போல பொறுப்பற்ற பதிவுகளை கவனத்துடன் விசாரித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறீர்களா எனவும் அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : ‘ அண்ணனாக இருந்து எல்லாவற்றை செய்வேன்.. விரைவில் சந்திப்பேன் ‘ – வீடியோ காலில் பேசிய விஜய்..

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களது முன்ஜாமின் மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் அக்டோபர் 10, 2025 அன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.