Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய்க்கு உங்க அட்வைஸ் என்ன ? கரூரில் கமல்ஹாசன் சொன்ன கமெண்ட்

Karur Stampede : கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் கட்சியின் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கினார்.

விஜய்க்கு உங்க அட்வைஸ் என்ன ? கரூரில் கமல்ஹாசன் சொன்ன கமெண்ட்
விஜய் - கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Oct 2025 18:31 PM IST

கரூரில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) மேற்கொண்ட பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாரிடமும், அப்பகுதி மக்களிடமும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்

கரூருக்கு அக்டோபர் 6, 2025 அன்று சென்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தை பார்வையிட்டார். பின்னர் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து தனது மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தலா ரூ.1 லட்சம்  நிதியுதவி வழங்கினார்.  மேலும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக  பேசிய அவர், நான் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்துள்ளேன். யார் தவறு என பேச வரவில்லை.

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல்.. விஜய் செய்த தவறுகள் இதுதான்.. லிஸ்ட் போட்டு விமர்சித்த பிரேமலதா!

பாதிக்கப்பட்ட மக்களை கமல் சந்தித்த வீடியோ

 

நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதனால் இந்த வழக்கு குறித்து அதிகம் பேசக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். ஏனெனில் அவர்கள் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்கள். கேள்விகள் கேட்காமல் இனிமேல் என்ன செய்வது என யோசிக்க வேண்டும். செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரத்திற்கு எப்படி வந்தார்கள் என கேள்வி கேட்பதை விட, சரியான நேரத்தில் வந்தார்கள் என்பது தான் எனக்கு ஆறுதல் இல்லை என்றால் இன்னும் சிலர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும். அவர் செய்ய வேண்டிய கடைமைய செய்திருக்கிறார்.

இதையும் படிக்க : முன்ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய ஆனந்த், நிர்மல் குமார்!

விஜயக்கு அட்வைஸ் என்ன?

இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பண்புள்ள தலைவர் என்ன செய்ய வேண்டுமோ, அப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்றார். அப்போது விஜயக்கு உங்கள் அட்வைஸ் என்ன என ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் அதனை கோர்ட்ல சொல்லுவாங்க என அங்கிருந்து கிளம்பி சென்றார்.