Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அது உண்மையில்ல…. வதந்தி – விஜய் குறித்து வெளியான தகவல் – உள்துறை அமைச்சகம் விளக்கம்

TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அக்டோபர் 4, 2025 அன்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவல் உண்மையில்லை எனவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பில் மாற்றமில்லை எனவும் உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

அது உண்மையில்ல…. வதந்தி – விஜய் குறித்து வெளியான தகவல் – உள்துறை அமைச்சகம் விளக்கம்
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Oct 2025 18:22 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் (Vijay )மேற்கொண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். மேலும் விஜய்யின் வாகனம் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அவரது பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். மற்றொரு பக்கம் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது உண்மையா ?

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய எட்டு முதல் 11 காவலர்கள் மற்றும் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் அவரது பாதுகாப்பை மேலும் அதிகரித்து இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க சி ஆர் பி எஃப் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – இனி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த நிலையில் இந்த தகவல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதன் படி, புலனாய்வு அறிக்கைகள் அடிப்படையில் பெறப்பட்ட பரிந்துரையின் படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பில் மாற்றமில்லை என உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என தெரியவந்துள்ளது.

இசட் பிரிவு பாதுகாப்பு என்பது பொதுவாக மாநில முதல்வர், மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்படும். இதில் காவல்துறையினர் 22 பேர் , 4 சிஆர்பிஎப் கமாண்டோக்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள். மேலும் குண்டு துளைக்காத வாகனம் அவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

இதையும் படிக்க : கட்சியினரை கட்டுப்படுத்த முடியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? தவெக வழக்கில் நீதிபதிகள் அதிரடி

கரூர் செல்ல திட்டமிட்டுள்ள விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அக்டோபர் 3, 2025 அன்று கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசிய விஜய், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்ற அனுமதிக்கு பிறகு விஜய் கரூர் செல்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.