கட்சியினரை கட்டுப்படுத்த முடியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? தவெக வழக்கில் நீதிபதிகள் அதிரடி
Court Rejects Bail: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் இந்த நிலையில் தவெகவினர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தங்கள் கேட்ட இடத்தை தரவில்லை எனவும் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என என தவெகவினரும், விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும், தொண்டர்களை கட்டுப்படுத்த தவறியதும் தான் இந்த விபத்துக்கு காரணம் என திமுகவினரும் மாறி குற்றம் செலுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கட்சியினரை கட்டுப்படுத்த முடியாதா?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் அக்டோபர் 27, 2025 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க : அமித் ஷாவுடன் செல்போனில் பேசிய விஜய்? உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்!
இந்த நிலையில் தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமாரின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த நிலையில் தவெகவினர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து எதுவும் தெரியாது என சொல்வது சரியா? கட்சியினரை கட்டுப்படுத்த முடியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா என கேள்வி எழுப்பியதுடன் அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
மேலும் சிபிஐ விசாரணை கோரி சமூக ஆர்வலர் உட்பட 7 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்க வேண்டாம். இது ஒரு துயர சம்பவம், இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த பிறகு அதில் திருப்தி இல்லை என்றால் சிபிஐ விசாரணைக் கோரலாம் என கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : கொஞ்சம் கூட இரக்கம் இல்ல.. விஜய் பிரச்சார பேருந்துக்கு ஆயுத பூஜை.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!
மேலும் இந்த வழக்கில், அனைத்து அரசியல் கட்சிகளும் எந்த விதமான அரசியல் பொதுக் கூட்டங்களையும், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் நடத்தக் கூடாது. பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து உறுதி செய்த பிறகு தான் அனுமதி வழங்க வேண்டும். குடிநீர், மருத்துவ வசதி, உணவு, கழிப்பிட வசதி ஆகிய வசதிகள் உள்ளதா என காவல்துறை ஆய்வு செய்த பிறகு தான் அனுமதி வழங்க வேண்டும். சென்னையில் இது போன்ற வழக்கு விசாரணை முடியும் வரை இந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.