Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய்க்கு சப்போர்ட்.. கரூர் சம்பவத்தில் இபிஎஸ் சொன்ன முக்கிய மேட்டர்!

Edappadi Palanisamy On Karur Stampede : கரூர் சம்பவத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தர்மபுரியில் பரப்புரை மேற்கொண்ட அவர், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும், தர்மபுரி பரப்புரையில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.

விஜய்க்கு சப்போர்ட்.. கரூர் சம்பவத்தில் இபிஎஸ் சொன்ன முக்கிய மேட்டர்!
எடப்பாடி பழனிசாமி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 02 Oct 2025 20:37 PM IST

தருமபுரி,  அக்டோபர் 13 :  கரூர் சம்பவத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தர்மபுரியில் பரப்புரை மேற்கொண்ட அவர்,  கரூர் கூட்ட நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலை ஒட்டி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நான்கு கட்ட பரப்புகளை முடித்தவர் ஐந்தாம் கட்ட பரப்புரையை செய்து வருகிறார். இந்த பரப்புரையின் போது ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதன்படி 2025 அக்டோபர் இரண்டாம் தேதி அணை இன்று எடப்பாடி பழனிசாமி தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பரப்புரை மேற்கொண்டார் . இந்த பரப்புரையின் போது தொண்டர்களுக்கு மத்தியில் கரூர் கூட்ட நெரிசலில் செல்லில் விழுந்த உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என திட்டவட்டமாக கூறினார். மேலும் பேசியவர், “கரூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பதறுகிறார். கரூர் விவகாரத்தில் ஏன் உன்னை மறைத்து பேசுகின்றனர். இதற்கெல்லாம் 2026 தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வண்ணம் என கரூர் எம்எல்ஏ நினைக்கிறார். உங்களது போலி வாக்குறுதிகளும் கொலுசு கொடுக்கும் வேலையும் இனி ஈடுபடாது. உங்க பற்றி எரியும்போது துணை முதல்வர் உல்லாசமாக வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டார்.

Also Read : ‘விஜய் கைது செய்யப்படுவார்’ எப்போது? திமுக சொன்ன பரபரப்பு பதில்!

கரூர் சம்பவத்தில் இபிஎஸ் சொன்ன முக்கிய மேட்டர்

கரூர் சம்பாதித்தால் நாடே அதிர்ந்து போனது. இதற்கு ஆட்சியாளர்களை காரணம் அவர்களே பொறுப்பு. மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. இன்று ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க் கட்சிக்கு ஒரு நீதி. முதல்வர் துணை முதல்வர் கூறும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்த மாட்டேன் என முதல்வர் கூறுகிறார்.. கருவில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை கடந்து சில தினங்களாக செயலாளர் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளை வைத்து விளக்கி வந்தனர் ஆளுங்கட்சியினர். திட்டங்களை செயலாளர்கள் சொல்லலாமா ஆனால் கரூர் சம்பவத்தை எப்படி துறை செயலாளர் சொல்ல முடியும்.

Also Read : ’விஜயின் இதயத்தில் வலியே இல்ல.. சினிமா வசனம் பேசுறாரு’ சீமான் பளீச்!

விருதுநகர் ஆணையம் அமைக்கப்பட்ட பின்பும் துறை செயலாளரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். துறை செயலாளர்கள் தங்களின் மேலே அரசியல் செய்வதில்லை என்பது உணர வேண்டும் உங்கள் துறையில் உள்ள வேலைகளை மட்டுமே பார்க்க வேண்டும். இவர் ஏறினார் சென்றால் கையை காட்டவில்லை என சொல்வது உங்கள் வேலை இல்லை இப்படியான தவறான செயல்களை செய்யும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சி அமைந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்