‘விஜய் கைது செய்யப்படுவார்’ எப்போது? திமுக சொன்ன பரபரப்பு பதில்!
Tvk Leader Vijay : கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஏன் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என திருமாவளவன் கேள்வி எழுப்பிய நிலையில், பதிலளித்துள்ளார்.

சென்னை, அக்டோபர் 02 : கரூர் விவகாரம் தொடர்பாக ஆணையம் விசாரணை அடிப்படையில் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இளங்கோவன் இவ்வாறு பதிலளித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை மாலை 4 மணிக்கு திட்டமிட்டு இருந்த நிலையில், விஜய் வேலுச்சாமி படத்திற்கு ஆறு மணியளவில் வருகை தந்தார். காலை முதலைத் தொண்டர்கள் வேலுச்சாமிபுரத்தில் கூடியிருந்தனர். விஜய் 6 மணி அளவில் கரூருக்கு வந்தவுடன் தனது பரப்புரையை மேற்கொண்டார். பரப்புரை வாகனத்தில் ஏறி விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு கூட்டம் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இதில் பலருக்கும் மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் முறுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விவகாரம் தமிழகத்தை தாண்டி ஒட்டு மொத்த நாட்டையுமே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தன் விசாரணையை தொடங்கியுள்ளார். இதற்கிடையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இனி பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட ஒரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மதியழகன் கரூர் பொறுப்பாளர் பவுன்ராஜ் கைதாகி உள்ளனர்.
Also Read : அமித் ஷாவுடன் செல்போனில் பேசிய விஜய்? உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்!
மேலும் நிர்மல் குமார் மற்றும் ஆனந்த் தலைமுறைவாகியுள்ள நிலையில் அவர் அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றார். பூவுக்குள் கைது செய்யவும் தனிப்படை போலீசார் முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையில் ஆனல் மற்றும் நிர்மல் குமார் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், 41 உயிர்களுக்கு அவர் பொறுப்பு ஏற்காமல் திமுகவை காரணம் என மறைமுகமாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அரசு தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்த நிலையில், விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஏன் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இதற்கு திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி கே எஸ் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
Also Read : விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? – திருமாவளவன் கேள்வி!
தவெக பொதுச் செயலாளரான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக்கூடியவர். விஜய் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மட்டுமே வருகிறார். முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுதான் முறை. அதனை தான் காவல்துறை தற்போது செய்துள்ளது. கருத்து எறும்பு தொடர்பாக விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையம் விசாரணை செய்து அறிக்கை தரும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஆணையம் விஜய் மீது தவறு உள்ளது அவர் கைது செய்ய வேண்டும். என்று கூறினால் காவல்துறை அந்த கடமையை செய்யும்” என்று கூறினார்