அமித் ஷாவுடன் செல்போனில் பேசிய விஜய்? உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்!
Karur TVK Rally Stampede : கரூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தவெக தலைவர் விஜய் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன. இதற்கு தற்போது நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், பாஜக பிடியில் விஜய் இல்லை எனவும் கூறியுள்ளார்.

சென்னை, அக்டோபர் 02 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசியதாவும், விஜயிடம் இருந்து முக்கியமான கடிதம் ஒன்றை வாங்கவும் பாஜக மேலிடம் திட்டமிட்டு வருவதாகவம் தகவல் வெளியானது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. தொடர்ந்து, இது தொடர்பாக போலீசாரும் விசாரணையும் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், கூட்ட நெரிசலுக்கு திமுகவே காரணம் என விஜய் மறைமுகமாக குற்றச்சாட்டி வருகிறார்.
இதற்கிடையில், அமித் ஷா மற்றும் விஜய் இருவரும் தொலைபேசியில் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து உள்துறை அமைச்சகம் விஜயிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. இப்படியான சூழலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 50வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Also Read : விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? – திருமாவளவன் கேள்வி!
அமித் ஷாவுடன் செல்போனில் பேசிய விஜய்?
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடன் விஜய் அமித் ஷாவிடம் பேசினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “இது தொடர்பான தகவல் எதுவும் எனக்கு தெரியாது. அவர்கள் இருவரும் பேசியதற்கான ஏற்பாடுகளை நான் செய்யவில்லை” என கூறினார். தொடர்ந்து, அவரிடம் பாஜக பிடியில் விஜய் இருக்கிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
Also Read : கரூர் விவகாரம்.. உங்களுக்கு ஏன் பதட்டம்? – செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை கேள்வி!
இதற்கு பதில் அளித்த அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக என விஜய் கூறி வருகிறார். இதனால், அவர் எப்படி பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்க முடியும். கரூர் விவகாரத்தில் பாஜக உண்மை கண்டறியும் குழு என்ன எழுதி கொடுத்து இருக்கிறார்கள் என தெரிந்தபின்னரே தெரியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து கரூர் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். அதாவது, “யார் கரெண்ட் ஆப் செய்தது. செருப்பை தூக்கி வீசியது யார். தவெக கேட்ட இடத்தில் அனுமதி கொடுக்காதது ஏன். இப்படி பல கேள்விகள் எழுகின்றன. பாஜக உண்மை கண்டறியும் குழு விசாரணை அறிக்கை விரையில் தலைமையிடம் அளிக்கும். அதன் மூலம் உண்மை வெளிவரும்” என்று தெரிவித்தார்.