Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் விவகாரம்.. உங்களுக்கு ஏன் பதட்டம்? – செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை கேள்வி!

Senthil Balaji vs Annamalai: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ள நிலையில், அண்ணாமலை அவரைப் பதற்றப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் விவகாரம்.. உங்களுக்கு ஏன் பதட்டம்? – செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை கேள்வி!
அண்ணாமலை - செந்தில் பாலாஜி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Oct 2025 08:11 AM IST

கரூர், அக்டோபர் 2: கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதற்றப்படுவது ஏன் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த 2025, செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த பரப்புரையின்போது சுமார் 27 ஆயிரம் மக்கள் கூடியதாக சொல்லப்படுகிறது. விஜய் பேசி சென்ற சிறிது நிமிடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் அதில் ஒன்றாக முன்னாள் அமைச்சரும், கரூர் திமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திருக்கிறது.

செந்தில்பாலாஜி விளக்கம் – அண்ணாமலை கருத்து


இந்த நிலையில் செந்தில் பாலாஜி நேற்று (அக்டோபர் 1) செய்தாளர்களை சந்தித்தார். அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை அளித்த அவர், தன்மீது சந்தேகம் எழுப்பியவர்களுக்கு சரமாரியான கேள்விகளையும் எழுப்பினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:  சதி வலையில் சிக்கிய விஜய் ; கரூர் சம்பவம் குறித்து திருமாவளவன் விமர்சனம்!

அதில்,  “கரூரில் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பொதுமக்கள் உயிரிழந்தது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிகள் குழு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை நடத்தியது. மேலும் இது தொடர்பான விசாரணையை பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஊடகங்களை சந்தித்து புதிய கதைகளை கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் ஊடக சந்திப்பு நடத்தி பொதுமக்களும் தமிழக வெற்றி கழகத்தினரும் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் வதந்தி எனக் கூற வேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சி நடந்த வேலுசாமிபுரம் கூட்டம் நடத்த தகுதியான இடமா என்பதை விசாரிக்க திமுக அரசு ஆணையம் அமைத்திருக்கும் நிலையில் அது குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டியது அவசியம் என்ன? எனவும் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு ஏடிஎமாக செயல்படும் முன்னாள் அமைச்சர் ;  மறைமுகமாக விமர்சனம் செய்த விஜய்..

யார் எங்கே சென்றார்கள்,செல்லவில்லை  என கேட்கும் தகுதி முதலில் திமுகவுக்கு இருக்கிறதா? என கேள்வியெழுப்பியுள்ள அண்ணாமலை,  கள்ளக்குறிச்சியில் திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் 66 உயிர்களை பலி கொண்ட போது அங்கு போகாத முதலமைச்சர், தென் மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது அங்கு சென்று மக்களை சந்திக்காமல் இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதலமைச்சர் இப்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள்.

நீதிமன்றமும் விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில் செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது” என கூறியுள்ளார்.