அதிமுக – தவெக கூட்டணி? பாஜகவை கழட்டிவிடும் இபிஎஸ்.. புயலை கிளப்பும் தினகரன்!
AIADMK - TVK Alliance : அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார் என்றும் எங்கள் தலைமையில் தான் ஆட்சி அமையும் என விஜய் சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி விஜய் தலைமையை ஏற்க தயாராகிவிட்டாரா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அக்டோபர் 11 : கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கு ஆதரவாக பேசியதில் இருந்தே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் தவெக கொடிகளை பார்க்க முடிகிறது. அந்த கொடிகளை பார்த்து அண்மையில் கூட எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டதாக உற்சாகமாக கூறினார். இதனால், தவெக அதிமுக கூட்டணி அமைக்கலாம் என பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக பேசியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், “கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு வாரங்களே ஆகுகிறது. கொடுமையான துயர சம்பவம நேரத்தில் கூட்டணி குறித்து பேசுவதா?
வீடு பற்றி ஏரியும்போது, சுருட்டுக்கு நெருப்பு கேட்கிற மாறி, எடப்பாடி பழனிசாமி பேசுவது அரசியல் கட்சி தலைவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தவெக கொடிகளை அதிமுக கூட்டங்களில் பிடிப்பது தரம் தாழ்ந்த செயல். தன் கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது. விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார். அந்த அளவிற்கு அதிமுக பலவீனமாகிவிட்டது.
Also Read : அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி.. ஒரே வார்த்தையில் ஓபனாக சொன்ன அண்ணாமலை..
’’பழனிசாமி பாஜகவை கழட்டி விடுவார்”
விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜகவை கழட்டி விட யோசிக்கமாட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், விஜய் வருவாரா என்பது தெரியவில்லை. ஏனென்றால், விஜய் தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பது தவெகவின் நிலைப்பாடு. திரை உலகத்தில் உச்சபட்ச நடிகராக இருந்த விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக்க அவர் கட்சி ஆரம்பித்து இருப்பாரா?
Also Read : இருமல் மருந்து நிறுவனம் தமிழகத்தில் இருந்தது கூட தெரியாத ஒரு அரசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
தொண்டர்களை அதை ஏற்று கொள்வார்களா? அல்ல விஜய் தான் கூட்டணி வந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தூக்கிப் பிடிப்பாரா? நடக்காத விஷயத்தை எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் வரும் தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி வெறும் 15 சதவீதத்திற்கு கீழ் தான் வரும். பாஜக கூட்டணி இருந்து வெளியேறியதும் அவதூறு பேசிய எடப்பாடி பழனிசாமி இப்போது நன்றியுடன் இருப்பதாக சொல்கிறார்.
எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மையற்றவர். வருக்கு துரோகத்தை தவிர ஒன்றும் தெரியாது. ” என்று கூறினார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி கணக்கு மாறும் சூழல் உள்ளது. ஏற்கனவே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்த நிலையில், இந்த கூட்டணி தவெகவை இழுக்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால், முதல்வர் வேட்பாளர் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதால், கூட்டணிக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.