Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட சீமான்.. வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்..

Supreme Court On Seeman Case: சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில், சீமான் மற்றும் விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இரு தரப்பும் இனி இந்த விவகாரத்தில் எந்தவொரு வழக்கையும் மேல்முறையீடாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட சீமான்.. வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Oct 2025 15:59 PM IST

டெல்லி, அக்டோபர் 8, 2025: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில், இருவரும் மன்னிப்பு கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. 2011 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சீமான் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். 2012 ஆம் ஆண்டு அந்த புகாரை அவர் வாபஸ் பெற்றார். ஆனால் 2023 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு புகாரை தாக்கல் செய்தார். நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கு பின்னணி என்ன?

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “இருவரும் பேசிக் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் விஜயலட்சுமி தரப்பில் “நீதி வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து, சீமான் கைது செய்யப்படுவதற்கான தடையை நீட்டித்து, வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Also Read: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. படிப்படியாக குறையும் வெப்பநிலை..

பின்னர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கோர தவறினால், அவரை கைது செய்யும் தடையை ரத்து செய்யப்படும்” என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், “விஜயலட்சுமி, சீமானுடன் சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதம் வழங்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டது.

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கோரிய சீமான்:

இந்த வழக்கு அக்டோபர் 8, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நடிகை விஜயலட்சுமி குறித்து நான் முன்பு கூறிய அனைத்தையும் வாபஸ் பெறுகிறேன்; மேலும், எதிர்காலத்தில் அவரை பற்றி எந்தவொரு அவதூறு கருத்தும் கூறமாட்டேன்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் – தவெக நிர்வாகி ராஜ்மோகன் வேதனை

மேலும், விஜயலட்சுமி தரப்பில், “நான் சீமானால் பாதிக்கப்பட்டுள்ளேன்; எனது வாழ்வாதாரத்திற்கான உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில், சீமான் மற்றும் விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இரு தரப்பும் இனி இந்த விவகாரத்தில் எந்தவொரு வழக்கையும் மேல்முறையீடாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை எனவும், சீமான் மீது அளித்த புகாரை திரும்பப் பெறுவதாகவும் விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.