AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உதயநிதி ஸ்டாலினின் தரமற்ற பேச்சு.. போராட்டம் நடத்தி புகார் அளிக்க தவெக முடிவு..

அப்போது உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது, திமுக தொண்டர்கள் நடிகை திரிஷாவின் பெயரை முழக்கமிட்டனர். இதையடுத்து, சிரித்தபடி, "தண்ணீர் வேறு எங்கு போனாலும் பரவாயில்லை, அங்கே போய்ச் சேர வேண்டும்" என்று கூறிவிட்டு, பின்னர் "நான் காவிரி தண்ணீரைத்தான் சொன்னேன்" என்று விளக்கம் அளித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் தரமற்ற பேச்சு.. போராட்டம் நடத்தி புகார் அளிக்க தவெக முடிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Aug 2026 07:53 AM IST

ஆகஸ்ட் 4, 2026: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சையில் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு:

அப்போது உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது, திமுக தொண்டர்கள் நடிகை திரிஷாவின் பெயரை முழக்கமிட்டனர். இதையடுத்து, சிரித்தபடி, “தண்ணீர் வேறு எங்கு போனாலும் பரவாயில்லை, அங்கே போய்ச் சேர வேண்டும்” என்று கூறிவிட்டு, பின்னர் “நான் காவிரி தண்ணீரைத்தான் சொன்னேன்” என்று விளக்கம் அளித்தார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருவதுடன், எதிர்க்கட்சித் தலைவரின் பதவிக்குரிய மாண்புக்கு ஏற்ற வகையில் அவர் பேசவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: காவிரி போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனங்கள்..

தவெக கண்டனம்:

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினர் ரேவந்த் சரண், இந்தக் கருத்து மிகவும் அருவருப்பானது என்றும், அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அமைச்சர் என். ஆனந்தன் இதுகுறித்து பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் என்ற மிகப் பெரிய பொறுப்பின் மாண்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தனது தாத்தாவும், தந்தையும் வகித்த பதவியின் தகுதியும் தராதரமும் கூட தெரியாமல் ஒருவர் இருக்க முடியுமா? முதலமைச்சர் விஜய் கூறுவது போல் மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் இதை மறந்துவிட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஜாதி பாகுபாட்டால் மனவேதனை.. கோவையில் தீயணைப்பு வீரர் சீருடையில் தூக்கிட்டு தற்கொலை.. மனைவி கண்ணீர் புகார்!

உதயநிதிக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்:

இந்தச் சூழலில், உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காவல் நிலையங்களில் புகார் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் மட்டுமின்றி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow Us