விசாரணை நிறைவு – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு
DMK Udhayanidhi Stalin Arrest Latest Updates in Tamil : முதல்வர் விஜய் குறித்தும் நடிகை ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் ஆங்காங்கே திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
DMK Udhayanidhi Stalin Arrest Live Updates in Tamil : தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்தக்கருத்தில் நடிகை ஒருவரையும் மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த விவகாரத்துக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை உதயநிதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னையில் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
வீடியோ
LIVE NEWS & UPDATES
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு
தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் நடந்த போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது.
தஞ்சை எஸ்பி சுந்தரவர்த்தன், திருவிடைமருதூர் டிஎஸ்பி அன்பழகன் ஆகியோர் உதயநிதியிடம் விசாரித்தனர்.
காவல் நிலையத்தில் மாலை 6.50 மணி அளவில் தொடங்கிய விசாரணை, இரவு 8.10 மணி அளவில் நிறைவடைந்தது. -
டெபாசிட் கூட வாங்க முடியாது – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உங்கள் அடையாளங்களை தூக்கி வைத்து விட்டு வாருங்கள் உதயநிதி, உங்களை எதிர்த்து எங்கள் தலைவர் சாமானிய பெண் ஒருவரை நிற்க வைத்து இதே சேப்பாக்கம் தொகுதியில் வென்று காட்டுவோம்… உங்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவினர் வாணவேடிக்கை!
செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை முடிந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்னும் சற்று நேரத்தில் வெளியே வர இருக்கக் கூடிய சூழலில் வெளியே கருப்பு, சிவப்பு கொடிகளுடன் கூடிய தொண்டர்கள் வாண வேடிக்கை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
உதயநிதியிடம் விசாரணை
தஞ்சாவூரில் திமுகவினர் குவிந்து வருவதை காரணம் காட்டி, செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைதாகி சுமார் 8 மணி நேரத்துக்கு பின் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.பி.சுந்தரவதனம் முன்னிலையில் உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
திமுக – காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு
இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சை செங்கிபட்டி காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காவல்நிலையத்திற்கு வெளியே திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
மக்களாட்சிக்கு எதிரானது – சீமான் கண்டனம்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது பதிவில், காவிரி நிதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை உதயநிதியின் கைது நடவடிக்கைக்கு
முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன்? மேடைகளில் தவறாக பேசினால் அவதூறு வழக்கு போடலாமே ஒழிய எடுத்த எடுப்பிலேயே கைது நடவடிக்கையில் இறங்குவது மக்களாட்சிக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். -
தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டியில் விசாரணை?
தஞ்சையில் திமுகவினரின் போராட்டம் வலுத்ததால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த நிலையில் புகார் பதிவான காவல் நிலையத்திற்கே விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி, வேனில் இருந்து கீழே இறங்க அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
“வருந்துவார் என்று நம்புகிறேன்” – திருமாவளவன் பேட்டி
டெல்லியில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், யாராக இருந்தாலும் பேசும் போது பெண்களை கேலி செய்யக் கூடாது, கொச்சைப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் உதயநிதியின் பேச்சு பெண்கள் வருந்தும் அளவிற்கு அமைந்துவிட்டது என்பதுதான் வருத்தத்திற்குறியது; உதயநிதி தனது பேச்சுக்கு வருந்துவார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
எஸ்.பி.க்கள் குவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்து வரப்பட இருக்கும் நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சை வருகை தந்துள்ளனர். தஞ்சை தெற்கு காவல் நிலையத்தைச் சுற்றியும் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சட்டம் தன் கடமையை செய்யும்” – அமைச்சர் ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எக்ஸ் தள பதிவில், “பொது இடங்களில் திமுகவினர் சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, அதனை கேள்வி கேட்ட மக்களையும் அதிகாரிகளையும் தாக்கி ரவுடியிச செயலில் ஈடுபடுவதும், ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுவதும் கடுமையான கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
-
உதயநிதி பேச்சு கண்டனத்திற்குரியது – காதர் மொகிதீன்
ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் பேசியதாவது, முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது அநாகரிக வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி பண்பாடற்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் விஜயின் மனம் புண்படும்படி உதயநிதி ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகளை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
-
|உதயநிதி கைது கண்டிக்கத்தக்கது – தேமுதிக எம்பி எல்.கே.சுதீஷ்
தேமுதிக எம்பி எல்.கே.சுதீஷ் பேசியதாவது, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது. யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் தவறுகளை சுட்டிக்காட்டும் இடத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன
என குறிப்பிட்டுள்ளார். -
“பெண்கள் குறித்து தவறாகப் பேசக்கூடாது” – அமைச்சர் அருண்ராஜ்
அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்துக்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி அப்படி பேசியிருப்பார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பார்த்துக் கொண்டிருக்காது. அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும்; பெண்கள் குறித்து தவறாகப் பேசக்கூடாது என்றார்.
-
பாசிசத்துக்கு விழுந்த அடி – முக ஸ்டாலின்
உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு தவெகவின் பாசிசத்துக்கு விழுந்த அடி – முக ஸ்டாலின்
-
உதயநிதி கடுமையான விமர்சித்தார் – முகஸ்டாலின்
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசின் கையாளாகத்தனத்தை உதயநிதி கடுமையான விமர்சித்தார் – முகஸ்டாலின்
-
அராஜகமாக கைது செய்துள்ளனர் – முக ஸ்டாலின்
காவிரி பிரச்னையை திசை திருப்பும் நோக்கில் உதயநிதியை அராஜகமாக கைது செய்துள்ளனர் – முக ஸ்டாலின்
-
அழிவை விரிவப்படுத்தும் – முகஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரிவப்படுத்தும் – முகஸ்டாலின்
-
உதயநிதி கைது தொடரும் போராட்டங்கள்
உதயநிதி கைதை அடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தொடரும் போராட்டங்கள்
-
4 பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை
உதயநிதியிடம் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்த திட்டம். எனவே அதனை சுற்றியுள்ள 4 பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை
-
முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம்
போலீசார் விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம்
-
உதயநிதிக்கு நாவடக்கம் தேவை – ஈபிஎஸ்
உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். பெண்களை இழுவுபடுத்தி பேசுவது ஏற்கத்தக்கது அல்ல – ஈபிஎஸ்
-
Udhayanidhi Stalin : ஒலக்கூரில் மதிய உணவு
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் உதயநிதிக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. அந்த காவல்நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு
-
இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்
இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்
-
Udhayanidhi Stalin Arrest : சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை – அரசு வழக்கறிஞர்
உதயநிதியை ரிமாண்ட் செய்து சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை – அரசு வழக்கறிஞர்
-
ஜாமினில் உதயநிதி விடுவிக்கப்படுவார் – அரசு வழக்கறிஞர்
விசாரணைக்குப்பிறகு காவல் நிலைய ஜாமினில் உதயநிதி விடுவிக்கப்படுவார் என அரசு வழக்கறிஞர் தகவல்
-
உயர்நீதிமன்றத்தில் மனு – விசாரணை துவக்கம்
உதயநிதி கைதுக்கு எதிரான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது
-
மூடப்பட்ட கடைகள் பின்னர் திறக்கப்பட்டன
மயிலாடுதுறையில் திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் அங்குள்ள கடைகள் மூடப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் மூடிய கடைகள் திறக்கப்பட்டன
-
ஆக்கப்பூர்வமான அரசியலை நடந்த்த வேண்டும் – அன்புமணி
ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வமான அரசியலை நடந்த்த வேண்டும் – அன்புமணி
-
பேச்சுக்கும், கைதுக்கும் அன்புமணி கண்டனம்
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கும், அவரது கைதுக்கும் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்
-
திமுக தொண்டன்கூட பயப்பட மாட்டான் – உதயநிதி
ன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாகத்தான் பார்க்கிறேன். இதற்கெல்லாம் நான் மட்டுமல்ல, கடைக்கோடி திமுக தொண்டன்கூட பயப்பட மாட்டான் – உதயநிதி
-
போராட்டம் – ஓபிஎஸ் கைது
உதயநிதி ஸ்டாலினின் கைது கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய ஓபிஎஸ் தேனியில் கைது
-
Udhayanidhi Stalin Arrest : இனிப்பு வழங்கி கொண்டாடும் தவெகவினர்
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனிப்பு வழங்கி தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்
-
9 பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு
பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குத்தொடர்ந்து உள்ளனர்
-
தவெக தற்போது அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது – கனிமொழி
திமுகவை எதிர்கொள்ள துணிச்சலின்றி தவெக தற்போது அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது – கனிமொழி
-
ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை
உதயநிதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை
-
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம்
உதயநிதி கைதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
-
காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை
உதயநிதி கைது குறித்து தகவல் அறிந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர்பாபு, உள்ளிட்டோர் உதயநிதி வீட்டிற்கு விரைந்து சென்று காவல் இணைய ஆணையர் விஜயகுமாரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்
-
Udhayanidhi Stalin : தஞ்சை அழைத்துசெல்லப்படும் உதயநிதி
உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் போலீசார் கைது செய்த நிலையில் அவர் சென்னை டூ தஞ்சைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்
-
Udhayanidhi Stalin Arrest: தொண்டர்கள் போராட்டம்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை முழுவதும் திமுக தொண்டர்கள் போராட்டம்
-
உதயநிதியை கைது செய்த போலீஸ்
சென்னை காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் திடீரென சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினை இன்று கைது செய்தது
-
உதயநிதியுடன் வாகனங்கள் செல்ல தடை
கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லபட்ட உதயநிதியின் வாகனத்துடன் வேறு திமுகவினரின் வாகனங்கள் செல்லதடை. செய்தியாளர்களின் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன
Published On - Aug 04,2026 11:32 AM