EPFO : இனி யுபிஐ மூலமே பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. வெளியான சூப்பர் தகவல்!
Withdraw PF Money Through UPI | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், ஊழியர்கள் பயன் பெறும் வகையில் பல அட்டசாகமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் அம்சம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் தங்களது பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எளிதாக எடுக்கவும், பிஎஃப் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடி தீர்வு காணவும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஊழியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி விரைவான மற்றும் பாதுகாப்பான சேவைகளை பெறுவதை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், பிஎஃப் பணத்தை யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் எடுப்பது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான மிக சிறந்த திட்டம் தான் இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். காரணம், இந்த அமைப்பின் கீழ் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அந்த பணம் அவர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் அதனை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும். எனவே பிஎஃப் பணத்தை எடுக்கும்போது பயனர்களுக்கு கூடுதலாக பணம் கிடைக்கும்.
இதையும் படிங்க : ஊழியர்கள் எப்போது தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தை எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
இனி பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கலாம் – இபிஎஃப்ஓ
இதுவரை ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், அவர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்து அது வங்கி கணக்குக்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது மிக சுலபமாக பிஎஃப் பணத்தை எடுப்பது தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : ரயில் ஒன் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% தள்ளுபடி – எப்படி பெறுவது?
அதாவது பிஎஃப் கணக்கில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தை பயனர்கள் தங்களது வங்கி கணக்கு மூலம் நேரடியாக யுபிஐ வாயிலாக எடுக்கொள்ளும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பயனர்களுக்கு அவர்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, அதில் எவ்வளவு பணத்தை எடுக்க முடியும் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.