Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்கள் UAN எண்ணுடன் தவறான மெம்பர் ஐடி இணைக்கப்பட்டுள்ளதா?.. சுலபமா Delink செய்யலாம்!

How to Delink Wrong Member ID To EPFO | யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தவறான மெம்பர் ஐடியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் மிக சுலபமாக நீக்கம் செய்துக்கொள்ளலாம். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் UAN எண்ணுடன் தவறான மெம்பர் ஐடி இணைக்கப்பட்டுள்ளதா?.. சுலபமா Delink செய்யலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Nov 2025 11:52 AM IST

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயன் பெறும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) செயல்பட்டு வருகிறது. இதில் ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊழியர்கள் தங்களது தேவைகளை இணையத்தில் பூர்த்தி செய்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், ஊழியர்கள் பல நாட்களாக கடும் சிக்கல்களை எதிர்க்கொண்ட ஒரு சேவையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஒரு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது, யுஏஎன் (UAN – Universal Account Number) எண்ணுடன் இணைக்கப்பட்ட தவறாக மெம்பர் ஐடியை (Member ID) மாற்றம் செய்வதற்கான முக்கியமான அம்சம் தான் அது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்ட தவறான மெம்பர் ஐடி

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் தான் யுஏஎன் எண்ணுடன் தவறான மெம்பர் ஐடி இணைக்கப்படுவது. தகவல்கள் தவறாக இணைக்கப்பட்டாலோ அல்லது ஊழியர்கள் ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாறினாலோ இந்த தவறு ஏற்படும். இந்த தவறை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் மாற்றம் செய்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : BNPL : பிஎன்பிஎல் அம்சத்தில் மறைந்திருக்கும் சிக்கல்.. என்ன என்ன தெரியுமா?

தவறான மெம்பர் ஐடியை நீக்கம் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் உங்களது யுஏஎன் எண் மற்றும் கேப்ட்சா உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
  3. லாக் இன் செய்த பிறகு சர்வீஸ் ஹிஸ்ட்ரி (Service History) ஆப்ஷனுக்குள் செல்ல வேண்டும்.
  4. அங்கு உங்கள் யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்ட மெம்பர் ஐடிகள் தோன்றும்.
  5. அதில் தவறாக லிங்க் செய்யப்பட்ட மெம்பர் ஐடியை தேர்வு செய்து அதனை கிளிக் செய்து டிலிங்க் (Delink) செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : பிள்ளைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 3 முக்கிய திட்டங்கள்!

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி உங்களது யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்ட தவறான மெம்பர் ஐடியை நீக்கம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.